Published : 12 Mar 2022 04:20 AM
Last Updated : 12 Mar 2022 04:20 AM
நெய்வேலி அருகே பெரியாக் குறிச்சியில் கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகம் செய்ததால் அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெய்வேலி என்எல்சி சுரங்கப் பகுதிகளுக்கு அருகாமையில் பெரியாக்குறிச்சி ஊராட்சி உள்ளது. இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் ஆழ்குழாய் கிணறு மூலம் குடிநீர் விநியோகித்து வருகிறது.
கடந்த இரு மாதங்களாக குடியிருப்புகளுக்கு விநியோ கிக்கப்படும் குடிநீர், கழிவுநீர் கலந்து பழுப்பு நிறத்தில் விநியோகிக்கப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவ டிக்கையும் எடுக்கவில்லை.
கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் செய்யப்பட்ட நிலையில், வாகனம் மூலம் குடிநீர் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இருந்தாலும் விநியோகம் செய்யப்படும் குடிநீர் அப்பகுதி மக்களுக்கு போதுமானதாக இல்லை. நிறம்மாறிய குடிநீருக்கும் தீர்வு காணப்படவில்லை என்ப தாலும் நேற்று 100-க்கும் மேற்பட்ட அப்பகுதி பெண்கள் கடலூர்-விருத்தாசலம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
மந்தாரக்குப்பம் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று, அவர்களிடம் சமரசம் பேசினர். ஊராட்சிமன்றத் தலைவரையும், கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களையும் வர வழைத்து தீர்வு காணப்படும் என உறுதியளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர். குடிநீர், கழிவுநீர் கலந்து பழுப்பு நிறத்தில் விநியோகிக்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT