Published : 12 Mar 2022 04:15 AM
Last Updated : 12 Mar 2022 04:15 AM
சாலை விரிவாக்கத்துக்காக ஏரிக்கரையோரம் உள்ள பனை மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுச்சூழல் ஆர்வ லர்கள், விவசாயிகள் முகமூடி அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.
புதுச்சேரி - விழுப்புரம் தேசியநெடுஞ்சாலை நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும்பணி நடந்து வருகிறது. சாலைவிரிவாக்கத்துக்காக திருவண்டார் கோவிலில் இருந்து மதகடிப்பட்டு வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனை மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. திருபுவனையில் ஏரிக்கரையோரம் இருந்த பனை மரங்களும் அகற்றப்பட்டு வரு கின்றன.
இதற்கு அப்பகுதியில் உள்ள விவசாயிகள் சங்கத்தினர், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு சுற்றுச்சூழல் ஆர்வலர் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கி ணைப்பாளர் கீதநாதன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பனை மரங்களை வெட்டாதே என்று முகமூடி அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டோர் கூறுகையில், “புதுச்சேரியில் சாலை விரிவாக்கம் என்ற பெயரில்ஏரிக்கரை ஓரங்களில் உள்ள நீர் வளத்தை பாதுகாக்கும் ஏராளமான பனை மரங்களை வெட்டும் மத்திய அரசின் நடவடிக்கையை புதுச்சேரி அரசு தடுக்க வேண்டும். ஏரி, குளம், குட்டைகள், நீரோடைகளை மூடக்கூடாது. சுற்றுச்சூழலை பாதிக்கும் திட்டங்களை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தினோம்” என் றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT