

திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது.
கடந்த தேர்தல்களில் நிலக் கோட்டை தொகுதிதான் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்ந்து ஒதுக்கப்பட்டு வந்துள்ளது. இந்தமுறை நிலக்கோட்டை தொகுதியை கைவிட்டுவிட்டு, வேடசந்தூர் தொகுதியைக் கேட்டுப்பெறும் முனைப்பில் காங்கிரஸ் தலைமை உள்ளது. திண்டுக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவராக இருப்பவர் சிவசக்திவேல். இவர் மாநில காங்கிரஸ் தலைவர் இளங்கோவனின் ஆதரவாளர் என்பதால் வேடசந்தூர் தொகு தியை இவருக்காக கேட்டு வருகின்றனர். இதனால் வழக்க மாக போட்டியிடும் நிலக் கோட்டை தொகுதியைக் கைவிட காங்கிரஸ் கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது.
வேடசந்தூர் தொகுதியில், திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் முன்னாள் துணை சபாநாயகர் எஸ்.காந்தி ராஜன், திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் கவிதாபார்த்திபன் ஆகியோர் உள்ளனர்.
வேடசந்தூர் தொகுதியை திமுக விட்டுக்கொடுக்காத பட்சத்தில் மீண்டும் நிலக் கோட்டை தொகுதியை தான் பெறவேண்டிய நிலைக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்படும். இந்நிலையில் நிலக்கோட்டை தொகுதியில் காங்கிரஸ் வேட் பாளராக மகிளா காங்கிரஸ் மாநில தலைவி ஜான்சிராணிக்கு வாய்ப்புள்ளது.
வேடசந்தூர் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டால், கடந்த 4 தேர்தல்களில் நிலக்கோட்டை தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்கிய திமுக நீண்ட இடைவெளிக்கு பின் களம் இறங்க வாய்ப்புள்ளது. இரண்டு தொகுதிகளையும் விட்டுக்கொடுக்க மனமில்லாத நிலை தான் வேடசந்தூர், நிலக்கோட்டை தொகுதி திமுக வினரிடம் உள்ளது.