

என்சிஇஆர்டி புத்தகங்களுக்குப் பதிலாக வேறு பாடப் புத்தகங்களை வாங்கிச்சொல்லி மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்று பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துக்கு உட்பட்ட பள்ளிகளில் மாணவர்கள் என்சிஇஆர்டி என்ற தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வரையறை செய்துள்ள பாடங்களையே படிக்கிறார்கள். இந்த நிலையில், என்சிஇஆர்டி பாடப் புத்தகங்களுக்குப் பதிலாக வேறு பாடப் புத்தகங்களை வாங்கிவரச்சொல்லி மாணவர் களை ஒரு சில பள்ளி நிர்வாகங் கள் நிர்ப்பந்தம் செய்வதாக சிபிஎஸ்இ-க்கு தொடர்ந்து ஏராள மான புகார்கள் வரப்பெற்றன. இந்த நிலையில், நாட்டில் உள்ள அனைத்து சிபிஎஸ்இ பள்ளி களின் முதல்வர்களுக்கும் சிபிஎஸ்இ கூடுதல் இயக்குநர் சுகந்த் சர்மா ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:
சிபிஎஸ்இ மாணவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட என்சிஇஆர்டி பாடப் புத்தகங்களை தவிர இதர வேறு எதையும் வாங்கச்செய்வது ஆரோக்கியமான நடைமுறை அல்ல. சிபிஎஸ்இ பாடத் திட்டத்துக்கு அடிப்படையே என்சிஇஆர்டி பாடப் புத்த கங்கள்தான். சிபிஎஸ்இ பள்ளிகள் தங்களுக்குத் தேவையான புத்த கங்களை என்சிஇஆர்டி விற் பனை மையங்களில் இருந்து வாங்கிக்கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்
அதுமட்டு மின்றி என்சிஇஆர்டி புத்தகங்களை சிபிஎஸ்இ இணைய தளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மாணவர் களும், பெற்றோரும் பயன்பெறும் வகையில் இத்தகைய வசதி குறித்து அவர்களுக்கு தெரி விக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக் கையில் கூறப்பட்டுள்ளது.