

ஜல்லிக்கட்டுக்காக 15 நாள் உண் ணாவிரதம் இருக்கவும் தயார் என நடிகரும், சமக தலைவருமான சரத் குமார் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி பந்தயத்துக்கு விதிக் கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி மதுரை பழங்காநத்தத்தில் சமத் துவ மக்கள் கட்சி சார்பில் சனிக் கிழமை உண்ணாவிரதப் போராட் டம் நடைபெற்றது. ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பேரவைத் தலைவர் பி.ராஜசேகர் முன்னிலை வகித்தார். உண்ணாவிரதத்தில் நிகழ்ச்சியில் சரத்குமார் பேசியதாவது:
தமிழர்களின் பாரம்பரிய விளை யாட்டுகளான ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ் பாதுகாக்கப்பட வேண் டும். இந்த வீரசரித்திரம் அழிந்து விடக்கூடாது. அந்த உணர்வோடு இங்கு திரண்டு வந்திருக்கிறோம். ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார். அதற்கு வலுசேர்க்கும் வகையில் இதுபோன்ற செயல்களில் நாம் ஈடுபட்டுள்ளோம். ஜல்லிக்கட்டுக் காக இன்று ஒரு நாள் மட்டுமல்ல. இன்னும் 15 நாள்களுக்குக்கூட உண் ணாவிரதம் இருக்க நான் தயார். எங்கள் குடும்பத்துக்கும், ஜல்லிக்கட்டுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எனது தாத்தா ஒரு ஜல்லிக்கட்டு வீரர். அவர் யாராலும் அடக்க முடியாத பஞ்சகல்யாணி என்ற காளையை எங்கள் ஊரான தலக்காவூரில் வளர்த்து வந்தார். அந்த காளை இறந்தபின் கோயில் கட்டி கும்பிட்டு வருகிறோம். முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சிகளுக்கு டெல்லி செவி சாய்க்கும். என்றார்.
இதில் ஜல்லிக்கட்டு நடைபெறும் கிராமங்களைச் சேர்ந்த பல ஆயிரம் பேர் காளைகளுடன் வந்து பங்கேற்றனர். அதிமுக சார்பில் அமைச்சர் செல்லூர் கே.ராஜு மற்றும் கட்சி நிர்வாகிகள் சரத்குமாரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.