

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவியும், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தாயாருமான தயாளு அம்மாள் (89), வயது மூப்பு காரணமாக கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் தங்கி, ஓய்வெடுத்து வந்தார்.
இந்நிலையில், அவருக்கு நேற்று உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து மருத்துவமனை டாக்டர்கள் கூறும்போது, "வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலப் பாதிப்புகள் தொடர்பாக பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்" என்றனர்.