இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 5 தொகுதிகள் அறிவிப்பு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 5 தொகுதிகள் அறிவிப்பு
Updated on
1 min read

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வாணியம்பாடி, பூம்புகார், கடையநல்லூர், விழுப்புரம், மணப்பாறை ஆகிய 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

வரும் சட்டமன்ற தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுகிறது. கூட்டணி மற்றும் 5 தொகுதிகள் ஏற்கெனவே முடிவாகிவிட்ட நிலையில், தற்போது 5 தொகுதிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.

இது தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''வாணியம்பாடி, பூம்புகார், கடையநல்லூர், விழுப்புரம், மணப்பாறை ஆகிய 5 தொகுதிகளில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி போட்டியிடும்'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in