காங்கிரஸின் வாரிசு அரசியலுக்கு மக்கள் மரண அடி கொடுத்துள்ளனர்: புதுச்சேரி பாஜக

4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் புதுச்சேரியில் நடந்த வெற்றி கொண்டாட்ட ஊர்வலம்
4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் புதுச்சேரியில் நடந்த வெற்றி கொண்டாட்ட ஊர்வலம்
Updated on
1 min read

புதுச்சேரி: "காங்கிரஸின் வாரிசு அரசியலுக்கு மக்கள் மரண அடி கொடுத்துள்ளனர்" என்று புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் கருத்து கூறியுள்ளார்.

நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் புதுச்சேரியில் வெற்றிக் கொண்டாட்ட ஊர்வலம் இன்று மாலை நடந்தது. அண்ணா சாலையில் தொடங்கிய இந்த ஊர்வலம் மிஷன் வீதி வரை மேளதாளங்கள் முழங்க நடத்தப்பட்டது. இதில் மகளிர் அணி சார்பில் பாரத மாதா வேடம் அணிந்தும் வண்ணப்பொடிகளைத் தூவியும் பாஜக தொண்டர்கள் வெற்றியைக் கொண்டாடினர்.

இந்த ஊர்வலத்தின் நிறைவில் பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் கூறுகையில், "பிரதமர் மோடி தலைமையில் பாஜக மிகப்பெரிய வெற்றிபெற்றுள்ளது. கடந்த 35 ஆண்டுகளில் முதல்முறையாக தொடர்ந்து 2-வது முறையாக உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் அமர்ந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் வாரிசு அரசியலுக்கு மக்கள் மரண அடி கொடுத்துள்ளனர்.

இத்தேர்தல் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டம். அப்போது, இந்தியாவில் எதிர்க்கட்சியே இல்லாத நிலை உருவாகும். இத்தேர்தலில் காங்கிரஸ் பூஜ்ஜியமாகியுள்ளது. காங்கிரஸின் ஊழலுக்கு எதிராகவும், பாஜகவின் வளர்ச்சிக்கு ஆதரவாகவும் மக்கள் வாக்களித்துள்ளனர். மோடி அலை நிரூபமணமாகியுள்ளது. மோடி அறிவித்தப்படி பெஸ்ட் புதுச்சேரி உருவாக பாடுபடுகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வெற்றி ஊர்வலத்தில், பாஜக மாநிலத்தலைவர் சாமிநாதன் தலைமையில் அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன் குமார், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in