Published : 19 Apr 2016 11:31 AM
Last Updated : 19 Apr 2016 11:31 AM

தமாகா போட்டியிடும் 26 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிப்பு

தேமுதிக - மக்கள் நலக் கூட்ட ணியில் இணைந்துள்ள தமாகா 26 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மூத்த துணைத் தலைவர்கள் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், பி.எஸ்.ஞானதேசிகன், துணைத் தலைவர் கோவை தங்கம் உள்ளிட்ட முக்கி யத் தலைவர்கள் தேர்தலில் போட்டியிட வில்லை.

துணைத் தலைவர் சி.ஞானசேக ரன், வாணியம்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் வேலூர் தொகுதியில் 1991 முதல் தொடர்ந்து 4 முறை வெற்றி பெற்றவர். காங் கிரஸில் இருந்து வாசன் விலகிய போது என்.ஆர்.ரங்கராஜன் (பட்டுக்கோட்டை), ஜான் ஜேக்கப் (கிள்ளியூர்) ஆகிய 2 எம்எல்ஏக் கள் அவருக்கு ஆதரவு தெரிவித் தனர். அவர்களில் ஜான் ஜேக்கப் கிள்ளியூரில் மீண்டும் போட்டியிடு கிறார்.

முன்னாள் எம்பி ஆர் . தேவதாஸ் சேலம் வடக்கு தொகுதியிலும், முன் னாள் எம்எல்ஏக்கள் ஏ.எஸ்.மகேஸ் வரி - மடத்துக்குளம், எம்.ராஜசேகரன்- முசிறி, ஓ.ஆர்.ராமச்சந்திரன் (கம்பம்) ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது.

26 பேரில் மகளிரணி தலைவர் ஏ.எஸ்.மகேஸ்வரி மட்டுமே பெண் வேட்பாளர். 4 பேர் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். சென்னை மயிலாப்பூரில் ஏ.எஸ்.முன வர் பாட்சா களமிறக்கப்பட்டுள்ளார். தமாகாவின் 26 வேட்பாளர்களும் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடுவார்கள் என அக்கட்சி யின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

வேட்பாளர்கள் விவரம்:

1. ராயபுரம் - பிஜூ சாக்கோ

2. மைலாப்பூர் - ஏ.எஸ். முனவர் பாட்சா

3. காட்பாடி - டி.வி.சிவானந்தம்

4. அணைக்கட்டு - பி.எஸ். பழனி

5. வாணியம்பாடி - சி.ஞானசேகரன்

6. பர்கூர் - எம்.ஆர்.ராஜேந்திரன்

7. கிருஷ்ணகிரி - ஆர்.ஜெயபிரகாஷ்

8. திருக்கோவிலூர் - டி.ஜி.கணேஷ்

9. சங்ககிரி - கே.செல்வகுமார்

10. சேலம் வடக்கு - ஆர்.தேவதாஸ்

11. நாமக்கல் - என்.இளங்கோ

12. பெருந்துறை - வி.பி.சண்முகம்

13. மேட்டுப்பாளையம் - டி.ஆர்.சண்முக சுந்தரம்

14. மடத்துக்குளம் - ஏ.எஸ்.மகேஸ்வரி

15. கிருஷ்ணராயபுரம் (தனி) - கே.சிவானந்தம்

16. முசிறி - எம்.ராஜசேகரன்

17. கடலூர் - ஏ.எஸ். சந்திரசேகர்

18. பூம்புகார் - எம்.சங்கர்

19. பாபநாசம் - எஸ்.டி.ஜெயக்குமார்

20. திருமயம் - பி.எல்.ஏ. சிதம்பரம்

21. மேலூர் - டி.என்.பாரத் நாச்சியப்பன்

22. கம்பம் - ஓ.ஆர்.ராமச்சந்திரன்

23. விளாத்திக்குளம் - பி.கதிர்வேல்

24. ஸ்ரீவைகுண்டம் - விஜயசீலன்

25. தென்காசி - என்.டி.எஸ்.சார்லஸ்

26. கிள்ளியூர் - ஜான் ஜேக்கப்

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x