மத்திய அரசின் உதய் திட்டம் குறித்த முதல்வர் ஜெயலலிதாவின் விளக்கம் தவறானது: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றச்சாட்டு

மத்திய அரசின் உதய் திட்டம் குறித்த முதல்வர் ஜெயலலிதாவின் விளக்கம் தவறானது: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றச்சாட்டு
Updated on
1 min read

மத்திய அரசின் உதய் திட்டம் குறித்த முதல்வர் ஜெயலலிதாவின் விளக்கம் ஆதாரமற்றது, தவறானது என மத்திய மின்சாரம் மற்றும் நிலக்கரி, மரபுசாரா எரிசக்தித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

மத்திய அரசின் உதய் திட்டம் குறித்து பேச தமிழக முதல்வர் ஜெய லலிதாவை பலமுறை சந்திக்க முயன்றதாகவும், ஆனால் ஒருமுறை கூட வாய்ப்பே கிடைக்கவில்லை எனவும் மத்திய மின்சாரம் மற்றும் நிலக்கரி, மரபுசாரா எரிசக்தி துறை அமைச்சர் பியூஷ் கோயல் அண் மையில் குற்றம்சாட்டி இருந்தார்.

இந்நிலையில் விருத்தாசலத்தில் நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரச் சாரக் கூட்டத்தில் இதற்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் ஜெயலலிதா, தான் ஒருபோதும் மத்திய அமைச்சர்களை சந்திக்க மறுத்ததே இல்லை என தெரிவித்தார். மேலும், உதய் திட்டம் தமிழக அரசுக்கும், தமிழக மக்க ளுக்கும் பயனளிக்காது. தனியார் நிறுவனங்களே பயன்பெறும். இது போன்ற பல காரணங்களால் அந்த திட்டத்தை தமிழக அரசு ஏற்கவில்லை எனவும் விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று திருச்சிக்கு வந்திருந்த மத்திய எரிசக்தி துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம், முதல்வரின் விளக்கம் குறித்து செய்தி யாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:

நாட்டிலுள்ள ஒவ்வொரு நுகர் வோருக்கும் பயனளிக்கும் வகை யில் உதய் திட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது. தமிழகம் போன்ற சில மாநிலங்களைத் தவிர, மற்ற அனைத்து மாநிலங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. உதய் திட்டத்தில் நுகர்வோரை பாதிக்கும் ஒரு சிறிய அம்சம்கூட இடம்பெறவில்லை. அதேசமயம் நுகர்வோரின் ஒவ்வொரு பைசாவையும் சேமிக்க இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.22,000 கோடி மக்கள் பணத்தை சேமிக்க முடியும்.

இதுகுறித்து விளக்குவதற்காக தமிழக முதல்வரைச் சந்திக்க முயற் சித்தேன். ஆனால், மாநில அரசின் பிடிவாத குணத்தால், என்னால் முதல் வர் ஜெயலலிதாவை சந்திக்க முடிய வில்லை. இந்த திட்டம் குறித்து தமிழக அரசுக்கு நிலவும் ஐயப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்காக இணைச் செய லாளர் தலைமையிலான குழுவை அனுப்பி இருந்தேன்.

மாநில அரசு கேட்ட கேள்வி களுக்கு அவர்களும் தெளிவாக விளக்கம் அளித்துள்ளனர். ஆனால், அதன்பிறகும் தமிழக அரசு இத்திட் டத்தில் சேரவில்லை.

உதய் திட்டத்தைச் செயல்படுத்தி னால் ஒவ்வொரு நுகர்வோரின் மின் கட்டணமும் வெகுவாகக் குறை யும். இதுகுறித்த விவரங்களை யார் வேண்டுமானாலும் மத்திய அர சின் எரிசக்தித் துறை அமைச்சக இணைய முகவரியில் பார்க்கலாம். உதய் திட்டம் தொடர்பாக முதல்வர் அளித்துள்ள விளக்கம் ஆதாரமற்றது, தவறானது. இவ்வாறு அவர் தெரிவித் தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in