Published : 09 Mar 2022 06:37 AM
Last Updated : 09 Mar 2022 06:37 AM
சென்னை: தமிழகம் முழுவதும் கோயில்களுக்குச் சொந்தமான 31 ஆயிரம்ஏக்கர் நிலங்கள் நில அளவையாளர்கள் மூலம் அளவீடு செய் யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் நிலங்களை நவீன ரோவர் கருவிகள் உதவியுடன் அளவீடு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.
கம்பி வேலி அமைப்பு
மாவட்ட வாரியாக தூத்துக்குடியில் 3,661 ஏக்கர், திருச்சியில் 3,151 ஏக்கர், திருப்பூரில் 3,044 ஏக்கர், திருநெல்வேலியில் 2,706 ஏக்கர், சிவகங்கையில் 1,898 ஏக்கர் உட்பட இதுவரை 31,671 ஏக்கர் நிலங்கள் அளக்கப்பட்டுள்ளன.
அதேபோல, அளவீடு செய்யப்பட்ட நிலங்களில் மாவட்ட வாரியாக விழுப்புரத்தில் 106,திருவண்ணாமலையில் 167, காஞ்சிபுரத்தில் 98, கோயம்புத்தூரில் 400 என பல்வேறு மாவட்டங்களில் எல்லைக்கல் நடப்பட்டு, கம்பிவேலி அமைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
கோயிலுக்கு வருவாய் ஈட்டப்படும்
எஞ்சிய நிலங்களை 150 நிலஅளவையர்கள் மூலம் 56 ரோவர்கருவிகளைக் கொண்டு அளவிடும் பணி நடந்து வருகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்கவட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம், கோயில் நிலங்களை கண்டறிவதுடன், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்துநிலங்களை பாதுகாத்து கோயிலுக்கு வருவாய் ஈட்டவும் ஏதுவாக இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT