அதிமுக சார்பில் மகளிர் தின விழா: ஓபிஎஸ், இபிஎஸ் கேக் வெட்டி கொண்டாட்டம்

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் கேக் வெட்டி, பா.வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்ட மகளிர் அணியினருக்கு வழங்கினர்.படம்: ம.பிரபு
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் கேக் வெட்டி, பா.வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்ட மகளிர் அணியினருக்கு வழங்கினர்.படம்: ம.பிரபு
Updated on
1 min read

சென்னை:சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக மகளிர் அணி சார்பில் உலகமகளிர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

அவர்களை மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி உள்ளிட்ட மகளிர் அணி நிர்வாகிகள் வரவேற்றனர். எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப் படங்களுக்கு இருவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் கேக் வெட்டி, மகளிர் அணி நிர்வாகிகளுக்கு வழங்கினர். இதைத் தொடர்ந்து 10 பேருக்கு தையல் இயந்திரம், டின்னர் செட் பாக்ஸ், கிஃப்ட் பாக்ஸ், புடவை மற்றும் அன்னதானம் வழங்கி மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்தனர். பின்னர் மகளிர் அணியின் நிர்வாகிகள், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதையடுத்து, ஓபிஎஸ், இபிஎஸ் உடன் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, பெஞ்சமின், பா.வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்ட நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.

முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி கூறும்போது, “அரசியல் கட்சிகளுக்குவெற்றி தோல்வி இயல்புதான். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் வழங்கியதீர்ப்பை ஏற்கிறோம். சசிகலா விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி, நாங்கள் நடப்போம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in