அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், தங்கதமிழ்செல்வனுக்கு மீண்டும் வாய்ப்பு: தொண்டர்கள் மகிழ்ச்சி

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், தங்கதமிழ்செல்வனுக்கு மீண்டும் வாய்ப்பு: தொண்டர்கள் மகிழ்ச்சி
Updated on
1 min read

தேனி மாவட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் தங்கதமிழ்செல்வனுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால் அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பெரியகுளம் தொகுதியில் போட்டியிட தேனி அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் கே. கதிர்காமு, பெரியகுளம் தென்கரை பேரூராட்சி முன்னாள் தலைவர் பாப்பாவின் கணவர் இளமுருகன், வழக்கறிஞர் தவமணி ஆகியோர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். ஆனால், கே. கதிர்காமுக்கு சீட் கிடைத்தது.

கடந்த தேர்தலின்போது பெரியகுளம் தொகுதி அதிமுக வேட்பாளராக இளமுருகன் அறிவிக்கப்பட்டார். ஆனால், அதிமுக கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்ட் கட்சிக்கு அந்த தொகுதி ஒதுக்கப்பட்டது. இதனால், இந்த முறை தனக்கு உறுதியாக சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இளமுருகன் இருந்தார். ஆனால், சீட் கிடைக்காததால் சற்று மன வருத்தத்தில் உள்ளதாக கட்சித் தொண்டர்கள் கூறுகின்றனர்.

போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வமும், ஆண்டிபட்டி தொகுதியில் தங்கதமிழ்செல்வனும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்ட செயலாளர் டி.டி.சிவக்குமாருக்கு கம்பம் தொகுதியில் சீட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மதுரையில் வசிக்கும் ஜக்கையனுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in