Published : 09 Mar 2022 05:30 AM
Last Updated : 09 Mar 2022 05:30 AM

தெள்ளார் அருகே மாந்தாங்கல் கிராமத்தில் பெருங்கற்கால இரும்பு உருக்காலை கண்டெடுப்பு

தெள்ளார் அருகே மாந்தாங்கல் கிராமத்தில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த இரும்பு உருக்காலை கண் டெடுக்கப்பட்டதாக தி.மலை மரபுசார் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அவ்வமைப்பின் தலைவர் ராஜ்பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில், “தி.மலை மாவட்டம் தெள்ளார் அடுத்த வெடால் அருகே உள்ள மாந்தாங்கல் கிராம கிழக்கு பகுதியில் உள்ள மலை அடிவாரத்தில் இரும்பு உருக்கு கழிவுகள் உள்ளன. அக்கழிவுகளுக்கு இடையே 4 செ.மீ., சுற்றளவு கொண்ட இரு துண்டு குழாய்களும், அதன் மத்தியில் 1 செ.மீ., சுற்றளவில் துவாரம் காணப்படுகிறது. சுடுமண்ணாலான இக்குழாய்களின் மேற்பரப்பு சிதைவுற்றுள்ளன. இரும்பு இருக்கும் உலைகளை எரியூட்ட,குழாய்கள் பயன்படுத்தப்பட்டிருக் கலாம். கத்தி, ஈட்டி, கோடாரி, வேல் உள்ளிட்ட பல பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இதனருகே உள்ள மற்றொரு மலையின் சமவெளி பகுதியில் பழங்கான பானை ஓடுகள் மற்றும் கல் ஆயுதங்கள் உள்ளன. இந்த சமவெளி பகுதியில் மனிதர்கள் வாழ்ந்திருக்கலாம். இதேபோல், பெருங்கற்கால நினைவு சின்னங்கள் என கூறப்படும் 10-க்கும் மேற்பட்ட பெரிய கல் வட்டங்கள், சிதைவின்றியுள்ளன. இதர கல் வட்டங்கள் சிதைந்துள்ளன.

இக்கிராமத்தின் சாலையோரம் இருந்த பெரிய கல்லை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அகற்றியபோது கிடைக்க பெற்ற ஈமப்பேழை, திருவண்ணாமலை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 3 ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான பெருங்கற்கால அடையாளங்கள் உள்ள மாந்தாங்கல் கிராமத்தில் தொல்லியல் துறை அகழாய்வு செய்தால் கூடுதல் தகவல்கள் கிடைக்கலாம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x