Published : 13 Apr 2016 08:26 AM
Last Updated : 13 Apr 2016 08:26 AM

படித்த, படிக்காத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேச்சு

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் படித்த, படிக்காத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்து வோம் என்று தாம்பரத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.

தேமுதிக ம.ந.கூட்டணி தமாகா அணி சார்பில் நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டம் தாம்பரம் சண்முகம் சாலையில் நேற்றிரவு நடந்தது. அதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்கேற்று பேசியதாவது:

இந்தியா சுதந்திரம் அடை வதற்கு முன்பு வெள்ளைக்காரர் களை விரட்டுவதற்காக ‘வெள்ளை யனே வெளியேறு‘ என்று போராடி னார்கள். இன்றைக்கு திமுக, அதிமுக என்னும் கொள்ளைக்காரர் களை விரட்டுவதற்காக ‘கொள்ளை யனே வெளியேறு’ என்று நாங்கள் 6 கட்சி தலைவர்களும் களமிறங்கி யுள்ளோம். திமுகவை, ‘தில்லு முல்லு கட்சி’ என்றும் ‘திருட்டு முன் னேற்றக் கழகம்’ என்றும் சொல்ல லாம். அதே போல, அதிமுகவை, ‘அனைத்திலும் திருட்டு முன்னேற் றக் கழகம்‘ என்று சொல்லலாம்.

அதர்மத்துக்கு எதிராக எங்கள் கூட்டணி அமைந்துள்ளது. நாங் கள் வேண்டுமா, இல்லை திமுக, அதிமுக வேண்டுமா? என்று மக்களாகிய நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ‘உங்களுக்காக நான்; மக்களுக்காக நான்’ என்று கூறும் ஜெயலலிதா ஏர் கூலர் வசதியோடு எழுதி கொடுத்ததை வாசிக்கிறார். அவருடைய பிரச்சாரத்துக்கு வந்த சாமானிய மக்கள் 4 பேர் இறந்துள்ளனர்.

கருணாநிதிக்கு ஜெயலலிதா எதிரி, ஜெயலலிதாவுக்கு கருணா நிதி எதிரி, இந்த 2 பேருக்கும் நான் தான் எதிரி. மு.க.ஸ்டாலினுக்கு அவ ரும், அவருடைய கெட்ட எண்ணங் களும் தான் எதிரி. இன்றைக்கு பிள்ளை பிடிப்பது போல் கட்சி உடைப்பு வேலைகளில் ஈடுபடு கிறார்கள்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், படித்த, படிக்காத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்து வோம். கூட்டணி தர்மத்தை நாங் கள் காப்பாற்றுவோம். அமையப் போவது கூட்டணி ஆட்சி என்பதால், ஜி.கே.வாசன் சொன்னதுபோல், எங்கள் கூட்டணியில் ஒருவர் தப்பு செய்தால் இன்னொருவர் கேட்பார்.

நாங்கள் நல்லவர்கள், அந்தப் பக்கம் தீயவர்கள். தர்மத்துக்கும், அதர்மத்துக்குமான யுத்தத்தில் நாங்கள் தர்மம். நாங்கள் மக்களின் பின்னால் நிற்கிறோம். அந்தப் பக்கம் ‘தளபதி’ என்று சொல்லிக்கொள்கிறார்கள். தர்மத் துக்காக போராடும் எங்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள்தான் தளபதிகள்.

வாக்களிக்கும்போது மக்கள் கையில் வைக்கப்படுகிற மைதான் திமுக, அதிமுகவுக்கு வைக்கிற வேட்டு. நல்லவர்களாகிய நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். அட்சய பாத்திரமாக இருந்த தமிழ கத்தின் வளத்தை திமுக, அதிமுக ஆட்சியில் கொள்ளையடித்துள்ள னர். 5 ஆண்டு காலம் ஆட்சி அதி காரத்தில் இல்லாத திமுக, மீண்டும் ஊழல் செய்வதற்காக வாய்ப்பு கேட்கிறது. இந்த கட்சிகளை தமிழக மக்கள் விரட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x