Published : 08 Mar 2022 07:37 AM
Last Updated : 08 Mar 2022 07:37 AM
சென்னை: நகைக் கடனுக்கான தள்ளுபடி தொகையை அந்தந்த சங்கங்களுக்கு அரசு உடனே வழங்கவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: கூட்டுறவு வங்கி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 5 பவுன் வரைஅடமானம் வைத்து வாங்கிய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக தலைவர் ஸ்டாலினும் அவரது மகனும் மேடைதோறும் பேசினர். இதை நம்பிசுமார் 48.85 லட்சம் பேர் தங்களது நகைகளை அடமானம் வைத்து கடன் வாங்கி உள்ளனர்.
ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததும் நகைக் கடன் தள்ளுபடிக்கு புதிய நிபந்தனைகளை விதித்தது.அதன்படி, 13.37 லட்சம் பேர்மட்டுமே தகுதி உள்ளவர்கள் என்றும், அவர்களுக்கு மட்டுமே நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் ஆணை பிறப்பித்தது.
இதையடுத்து, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு நகைக் கடன் தள்ளுபடிக்கான தொகையை அரசு வழங்கிஇருக்க வேண்டும். ஆனால், அதை தராமல், அந்தந்த சங்கங்களில் உள்ள வைப்பு நிதியை, நகைக்கடன் தள்ளுபடிக்கும், அன்றாடபணிகளுக்கும் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தியுள்ளது.
இதனால், விவசாயக் கடன்கள், அவசரகால நகைக் கடன், வைப்புநிதிக்கான தொகையை வழங்குதல் உள்ளிட்ட அன்றாடப் பணிகளுக்குகூட நிதி இல்லாமல் சங்கங்கள் திண்டாடி வருகின்றன. எனவே,நகைக் கடன் தள்ளுபடி செய்த தொகையை உடனடியாக சங்கங்களுக்கு அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT