Published : 08 Mar 2022 04:12 AM
Last Updated : 08 Mar 2022 04:12 AM
கோவையில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்ட்முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்த திட்டத்தின்கீழ் சுமார் 450 பெண்தன்னார்வலர்கள் பணியாற்றி வருகின்றனர்.அவர்கள் வீடுகள்தோறும் சென்று 18 வயதுக்கு மேற்பட்டவர் களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவை பரிசோதித்து வருகின்றனர். மேலும், வாய் புற்றுநோய்க்கான அறிகுறிகள் யாருக்கேனும் இருக்கிறதா என்பதையும், 30 வயதுக்கு மேற்பட்டபெண்களுக்கு மார்பக புற்றுநோய்,கருப்பை வாய் புற்றுநோய் அறிகுறிகள் இருக்கிறதா என்பதையும் கேட்டுதெரிந்துகொள்கின்றனர்.
நோய்க்கான அறிகுறிகள் இருப்பின் அவர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்கி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அருகில்உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரை செய்கின்றனர். இதேபோல, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், குடிபோதைக்கு அடிமையானவர்கள், காசநோய் பாதிப்புள்ளவர்களை கண்டறிந்து உரிய சிகிச்சைக்கு அனுப்பிவைக்கின்றனர்.
இதுதொடர்பாக, தொற்றா நோய்கள் மாவட்ட திட்ட அலுவலர் டாக்டர் விஜயகுமார் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் 18 வயதுக்குமேற்பட்டவர்கள் சுமார் 28 லட்சம் பேர்உள்ளனர். அவர்களில் இதுவரை 6.61 லட்சம் பேரின் சர்க்கரை அளவும், 6.58 லட்சம் பேரின் ரத்த அழுத்தமும் பரிசோதிக்கப்பட்டுள்ளது. எஞ்சி யுள்ளவர்களுக்கும் மே 31-ம் தேதிக்குள் இந்த பரிசோதனைகளை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இந்த பரிசோதனையில் புதிதாக 26,941 பேருக்கு உயர் ரத்த அழுத்தமும், 17,983 பேருக்கு சர்க்கரையின் அளவும் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கெனவே அரசு மருத்துவமனை களில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்காக சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு தேவையான மருந்து பெட்டகங்கள் தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.
பிசியோதெரபி சிகிச்சை தேவைப் படுவோரின் வீட்டுக்கு சென்று நோயாளியுடன் இருக்கும் ஒருவருக்கு அந்த சிகிச்சையை தொடர்ந்து வழங்குவதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், படுத்த படுக்கையாக இருப்பவர்களின் வீட்டுக்கே சென்று, அவர்கள் முறையான சிகிச்சை பெற உடனிருப்பவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் இதற்கென கோவையில் மொத்தம் 18 வாகனங்கள் இயங்கி வருகின் றன. அதில், ஒரு செவிலியர், பிசியோதெரபி நிபுணர் ஆகியோர் இடம்பெற்றிருப்பர். தன்னார்வலர் கள் மட்டுமல்லாது, ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோரும் நோயாளிகளை கண்டறிந்து தகவல் தெரிவிக்கின்றனர்.
இதுதவிர, 104 என்ற எண்ணை அழைத்தும் மக்கள் தகவல் தெரி விக்கலாம்.என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT