ராமேசுவரத்தில் அரசு கல்லூரி அமைக்கும் கோரிக்கை நிராகரிப்பு: ஜெயலலிதா மீது ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு

ராமேசுவரத்தில் அரசு கல்லூரி அமைக்கும் கோரிக்கை நிராகரிப்பு: ஜெயலலிதா மீது ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு
Updated on
1 min read

திமுக கூட்டணி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் ராமேசுவரத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் சுப. தங்கவேலன் தலைமை வகித்தார். இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பவானி ராஜேந்திரன், கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, பெருந்தமிழர் மக்கள் கட்சி, முஸ்லிம் லீக், ஆதிதமிழர் பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில் மனிதேநேய மக்கள் கட்சியின் தலைவரும், ராமநாதபுரம் சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளருமான ஜவாஹிருல்லா பேசியதாவது:

ராமேசுவரத்தில் 10 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இப் பள்ளிகளில் ஆண்டுதோறும் 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பிளஸ் 2 முடித்துவிட்டு வெளியேறுகிறார்கள். அவர்கள் மேல்கல்விக்காக ராமநாதபுரம் அல்லது மதுரைக்கு தான் செல்ல வேண்டியுள்ளது. ராமேசுவரம் தீவில் கல்லூரி இல்லாததால் மீனவ மாணவர்கள் 12-ம் வகுப்போடு நிறுத்திவிட்டு கடலுக்குச் செல்கின்றனர். சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதாவிடம், ராமேசுவரத்தில் அப்துல் கலாம் பெயரில் அரசு கல்லூரி திறக்க வேண்டும் என வலியுறுத்தினேன். ஆனால் அந்த கோரிக்கையை நிறைவேற்றத் தவறிவிட்டார் என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in