

சிவகாசியைச் சேர்ந்த பிரம்மனுக்கு சொந்தமான பட்டாசு ஆலை, சாத் தூர் அருகே ஒட்டம்பட்டி கிராமத்தில் இயங்கி வருகிறது. இந்த ஆலையில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப் படுகின்றன. இங்கு 50-க் கும் மேற்பட்ட அறைகளில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றினர். நேற்று மாலை ஒரு அறையில் பட்டாசுகளுக்கு வெடிமருந்து செலுத் தும்போது உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறை தரைமட்டமானது. அங்கு பணியாற்றிய அமீர்பாளையத்தைச் சேர்ந்த கணேசன் (20) உயிரிழந்தார். படுகாயமடைந்த ராமர்(19) சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வெம்பக்கோட்டை போலீஸார் விசாரிக்கின்றனர்.