Published : 07 Mar 2022 06:30 AM
Last Updated : 07 Mar 2022 06:30 AM

மாற்றுத் திறன் மாணவருக்கு உதவித்தொகை: மார்ச் 31-க்குள் விண்ணப்பிக்க யுஜிசி அறிவுறுத்தல்

சென்னை: பிஎச்டி, எம்.பில். பயிலும் மாற்றுத் திறன் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற மார்ச் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அனைத்துவித உயர்கல்வி நிறுவனங்களுக்கும் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) செயலர் ரஜினிஷ் ஜெயின் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

எம்.பில்., பிஎச்டி பயிலும் மாற்றுத் திறன் மாணவர்களுக்கு மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தேசிய கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

அதன்படி, இந்த ஆண்டில் உதவித்தொகை பெற விரும்பும் தகுதிபெற்ற மாற்றுத் திறன் மாணவர்கள் w‌w‌w.‌u‌g​c.​a​c.‌i‌n/‌u‌gc ‌sc‌h‌e‌m‌e‌s என்ற இணையதளம் வழியாக மார்ச் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதுதொடர்பாக கூடுதல் விவரங்களை மேற்கண்ட யுஜிசி தளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் தேர்வாகும் மாணவர்களுக்கு முதல் 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.31,000 உதவித் தொகை, இதர செலவுகளுக்கு ஆண்டுதோறும் ரூ.12,000வழங்கப்படும். 3-ம் ஆண்டு முதல்மாதம் ரூ.35,000 உதவித் தொகையும், செலவினத் தொகையாக ஆண்டுதோறும் ரூ.25,000 வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x