

சென்னை: வாளும் கேடயமுமாக இருந்து,தமிழ் நிலத்தை என்றும் திமுககாக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அண்ணா தலைமையில் முதன்முதலாக திமுக ஆட்சி அமைந்த தினம் மார்ச் 6. இதையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு:
தமிழர் தலைமுறை தழைக்க, தமிழ்த் தாய் பெற்றெடுத்த அண்ணா தலைமையில் திமுக முதன்முதலில் ஆட்சி அமைத்த நாள் இன்று (மார்ச் 6).
எத்தனை சோதனைகள், அடக்குமுறைகள், அவதூறுகள், அத்தனையும் கடந்து தமிழக மக்களின் பேரன்புடன் எத்தனை சாதனைகள்.
பெரியார், அண்ணா வழியில்...
இனப் பகைவரும், அவர்தம் கைக்கூலிகளும் ஆயிரம் அரிதாரம் பூசி வந்தாலும், அவர்களுக்கே உரிய பொய்யும் புரட்டும் வன்மமும் கலந்து வசை மாரி பொழிந்தாலும், பெரியார், அண்ணா, கருணாநிதி காட்டிய வழியில், வாளும் கேடயமுமாக தமிழ் நிலத்தை திமுக என்றும் காக்கும். இவ்வாறு அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.