Published : 07 Mar 2022 05:30 AM
Last Updated : 07 Mar 2022 05:30 AM

புதுச்சேரி பழைய துறைமுகப் பாலத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க நடவடிக்கை: ஆளுநர் தமிழிசை உறுதி

புதுச்சேரி

புதுச்சேரி பழைய துறைமுகப் பாலத்தின் இடிந்த பகுதியை நேற்று காலை துணைநிலை ஆளுநர் தமிழிசை பார்வையிட்டார். அதிகா ரிகள் உடனிருந்து விளக்கினர். ஆய்வின்போது உப்பளம் தொகுதிஎம்எல்ஏ அனிபால் கென்னடி, அதிமுக செயலாளர் அன்பழகன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்னர் ஆளுநர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:

கடல் சீற்றம் காரணமாக பழைய துறைமுகப் பாலம் இடிந்துள்ளது வருத்தம் அளிக்கிறது. முதல்வரி டம் கலந்தாலோசித்து இந்த பாலத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சாகர் மாலா திட்டத்தின் கீழ் இப் பகுதியை மேம்படுத்த ரூ.60 கோடி மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. சாகர் மாலா திட்டத்தின் கீழ் வேலைநடைபெறும்போது பழமை மாறாமல் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைப்பேன்.

சாகர் மாலா திட்டத்தில் இங்கு பெரிய சரக்கு கப்பல்கள் வந்து வாணிபத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல், சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், கப்பல்கள் விடவும் ஏற்பாடு நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.

ராஜ்நிவாஸ் கட்டிடமும் மோச மான நிலையில் உள்ளதே என்றுகேட்டதற்கு, “ராஜ்நிவாஸ் கட்டிட மும் சிறிது பலம் இல்லாமல் உள்ளது. அதனை இடிக்கக் கூடாதுஎன்று கோரிக்கை வைத்துள்ளேன்” என்றார்.

வெள்ள நிவாரணமாக புதுச் சேரி கோரிய தொகையில் மிகக்குறைவாகவே மத்திய அரசு வழங் கியுள்ளதே என்று கேட்டதற்கு, “மத்திய அரசு வெள்ள நிவார ணமாக புதுவைக்கு ரூ.17 கோடிகொடுத்துள்ளது. பணம் மட்டுமல் லாமல் பொருளாக மத்திய அரசு நிறைய உதவி செய்துள்ளது. மீட்பு பணிக்கு துணை ராணுவத்தை அனுப்பியது. புதுவைக்கு அனைத்தும் முழுமையாக கிடைக்க வேண் டும் என்பதே மத்திய அரசின்எண்ணம்” என்று குறிப்பிட்டார்.

புதுச்சேரி அரசின் கோரிக்கை யான வெள்ள நிவாரணத் தொகை ரூ.300 கோடியை புறக்கணித்து விட்டு மத்திய அரசு வெறும் ரூ.17 கோடி மட்டுமே தந்துள்ளதே என்று கேட்டதற்கு, பதில் தராமல் ஆளுநர் புறப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x