Published : 28 Apr 2016 07:57 AM
Last Updated : 28 Apr 2016 07:57 AM

தமிழகம் முழுவதும் இதுவரை 2,113 வேட்பாளர்கள் மனு தாக்கல்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தமிழகம் முழுவதும் இதுவரை 2 ஆயிரத்து 113 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் 87 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் சென்னையில் உள்ள தொகுதிகளில் நேற்று ஒரே நாளில் 73 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று 45 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை தொகுதியில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வீரக்குமார், பேருந்து நிலையத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத் தும் அலுவலர் பாரியிடம் வேட்புமனு வை தாக்கல் செய்தார். அப்போது, தேமுதிக வடக்கு மாவட்ட செயலாளர் அனகை முருகேசன், மதிமுக மாவட்ட செயலாளர் ஜெகன் தனசேகரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் செங்கை தமிழரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மதுராந்தகம் திமுக வேட்பாளர் புகழேந்தி, கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பர்கத் பேகத்திடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். செய்யூர் தொகுதி திமுக வேட்பாளர் ஆர்டி. அரசு தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயகுமாரிடம் வேட்பு மனுதாக்கல் செய்தார்.

மதுராந்தகம் தொகுதி பாமக வேட்பாளர் ஆதிகேசவன், நாம் தமிழர் வேட்பாளர் வெற்றிச்செல்வன், சுயேச்சை வேட்பாளர் மணிபாரதி, செய்யூர் தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் தசரதன் பாஜக வேட்பாளர் சம்பத், பெரும்புதூர் தொகுதியில் பாமக வேட்பாளர் முத்தரசன், பகுஜன் சமாஜ் வேட்பாளர் சந்திரன் ஆகி யோர் நேற்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

உத்திரமேரூர் தொகுதி பகுஜன் சமாஜ் வேட்பாளர் சுரேஷ், தேமுதிக வேட்பாளர் ராஜேந்திரன், சுயேட்சை வேட்பாளர் வனசுந்தரி, செங்கல்பட்டு தொகுதி இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன், காஞ்சி தொகுதி பகுஜன் சமாஜ் வேட்பாளர் கன்னியப்பன், சுயேட்சை வேட்பாளர் தமிழ்ச்செல்வன், திருப்போரூர் தொகுதி சிவசேனா வேட்பாளர் குமார், நாம் தமிழர் வேட்பாளர் எள்ளால இளன், பாஜக வேட்பாளர் ரங்கசாமி ஆகியோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

பல்லாவரம் தொகுதி பாமக வேட்பாளர் ஆர்.வெங்கடேசன், மக்கள் நலக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழர் முன்னேற்றப் படை அமைப்பின் நிறுவனத் தலைவரான கி.வீரலட்சுமி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் பி.கருப்புசாமி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பி.சீனிவாச குமார் ஆகியோர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்தனர்.

தாம்பரம் தொகுதி பாமக வேட்பாளர் ஆர்.சுரேஷ், மக்கள் நலக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் மா.செழியன், எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் எஸ்.முக மது பிலால், கொங்குநாடு மக் கள் தேசிய கட்சி வேட்பாளர் பி.ஆறு முகம் மற்றும் சுயேட்சை வேட்பாளர் கள், தாம்பரம் கோட்டாட்சியரும் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான ஜி.விமல்ராஜிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் நேற்று 42 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்தனர்.

கும்மிடிப்பூண்டி தொகுதியில் திமுக கூட்டணியைச் சேர்ந்த மக்கள் தேமுதிக வேட்பாளர் சி.எச்.சேகர், பொன்னேரி(தனி) தொகுதி திமுக வேட்பாளர் பரிமளம், மக்கள் நலக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செந்தில்குமார், பாஜக வேட்பாளர் கணேசன் ஆகியோர் நேற்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

திருத்தணி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரபு, திருவள்ளூர் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் பாலசுப்ரமணி ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

பூந்தமல்லி(தனி) தொகுதி மதிமுக வேட்பாளர் கந்தன், ஆவடி தொகுதி பகுஜன் சமாஜ் வேட்பாளர் சார்லஸ், மதுரவாயல் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் ரங்கராயன், இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் ஆனந்தபிரியா ஆகியோர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

அம்பத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அன்புதென்னரசன், பகுஜன் சமாஜ் வேட்பாளர் பிரகாஷ், மாதவரம் தொகுதி பாஜக வேட்பாளர் ஜானகிராமன், பகுஜன் சமாஜ் வேட்பாளர் கிரி, திருவொற்றியூர் தொகுதி திமுக வேட்பாளர் கே.பி.பி.சாமி, தேமுதிக வேட்பாளர் ஆறுமுகம் ஆகியோரும் நேற்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

திருவொற்றியூர் தொகுதி பாஜக வேட்பாளர் சிவகுமார், சிவசேனா கட்சி வேட்பாளர் கர்ணன் ஆகியோரும் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x