

அதிமுக, அமமுக இணைப்பு குறித்த சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பண்ணை வீட்டில் ஓ.பன்னீர்செல்வத்தை 2 முன்னாள் அமைச்சர்கள் சந்தித்து பேசினர்.
ஓ.பன்னீர்செல்வம் பண்ணை வீட்டில் சமீபத்தில் நடந்த தேனி மாவட்ட நகர, ஒன்றிய நிர்வாகிகள் கூட்டத்தில், அதிமுக, அமமுக இணைந்து செயல்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து 3 மணி நேரம் ஆலோசனை நடத்தினர். நேற்று முன்தினம் இரவு முன்னாள் அமைச்சர்கள் புத்திச்சந்திரன், செல்லப்பாண்டியன் ஆகியோர் பண்ணைவீட்டில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தனர். அப்போது அதிமுக, அமமுக இணைப்பு பற்றி பேசப்படும் கருத்துகள் குறித்து ஆலோசித்ததாகத் தெரிகிறது. சந்திப்பு குறித்த விவரங்கள் எதையும் அவர்கள் தெரிவிக்கவில்லை