இலவச திட்டங்கள் இடம்பெறும் என எதிர்பார்ப்பு: திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு

இலவச திட்டங்கள் இடம்பெறும் என எதிர்பார்ப்பு: திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு
Updated on
1 min read

திமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் கரு ணாநிதி இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுகிறார்.

சட்டப்பேரவைத் தேர்தலை யொட்டி திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்க முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் 9 பேர் கொண்ட குழு கடந்த ஜூலை 27-ம் தேதி அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவினர், தமிழகத் தின் 32 மாவட்டங்களுக்கும் நேரில் சென்று கட்சியினர் மட்டு மின்றி, பல்வேறு துறையி னரை சந்தித்து கருத்துகளை கேட்டறிந்தனர். அதனடிப்படை யில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணத்தின்போது அவரிடம் வழங்கப்பட்ட மனுக்களில் உள்ள அம்சங்களும் அறிக்கை யில் சேர்க்கப்பட்டுள்ளன.

வரைவு தேர்தல் அறிக் கையை டி.ஆர்.பாலு தலை மையிலான குழுவினர் கடந்த 7-ம் தேதி கருணா நிதியிடம் வழங்கினர். தேர்தல் அறிக்கை 10-ம் தேதி வெளி யிடப்படும் என ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, இன்று மாலை 6 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் கருணாநிதி வெளியிடுகிறார்.

இதில் இலவசத் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்ற எதிர் பார்ப்பு அக்கட்சியினரிடம் எழுந்துள்ளது.

தமிழகத்தில் 1 கோடியே 7 லட்சம் பேர் முதல்முறையாக வாக்களிக்க உள்ளனர். அது போல வேலைவாய்ப்பு அலுவல கங்களில் 1 கோடிக்கும் அதிக மான இளைஞர்கள் வேலைக் காக பதிவு செய்துள்ளனர். இவர்களையும், பெண்களை குறிப்பாக சுயஉதவிக் குழு பெண்களையும் கவரும் வகை யில் பல்வேறு திட்டங்கள் திமுக தேர்தல் அறிக்கை யில் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது. சுத்திகரிக்கப் பட்ட இலவச குடிநீர், குடும்பத் தில் ஒருவருக்கு வேலை, விவ சாய கடன்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழு கடன்கள் ரத்து உள்ளிட்ட அறிவிப்புகளும், சில வீட்டு உபயோகப் பொருட்களை இலவசமாக வழங்கும் அறி விப்பும் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in