

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் அருகே ஜெயலலிதாவின் தோழி சசிகலா வந்ததை அடுத்து, தேவர் சிலை அருகே அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலை முழுவதும் அதிமுக கட்சிக் கொடியுடன் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.
சசிகலா வந்தவுடன் காரின் முன்பாக திரண்ட தொண்டர்கள் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க ஏற்பாடு செய்து இருந்தனர். ஆனால், சசிகலா காரை விட்டு இறங்காமல் சென்றதால் காரை மறித்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸார் அவர்களை அப்புறப்படுத்தினர். அப்போது தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இதனால் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது. இதைத் தொடர்ந்து சசிகலா தேவர் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு அவரை வழியனுப்பி வைத்தனர்.
இதனால் ராஜபாளையம் - தென்காசி சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.