Published : 06 Mar 2022 04:30 AM
Last Updated : 06 Mar 2022 04:30 AM

விவசாயிகள் ஊக்க நிதி பெற மார்ச் 15-க்குள் புதுப்பிப்பு அவசியம்

தேனி

வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை மூலம் விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.

மத்திய அரசின் இத்திட்டத்தின் மூலம் தேனி மாவடடத்தில் 43 ஆயிரத்து 634 பேர் பயனடைந்து வருகின்றனர். இதுவரை 10 தவணை வரை விவசாயிகள் ஊக்கத் தொகை பெற்றுள்ளனர். 11-வது தொகையைப் பெற விவசாயிகளின் ஆதார் விவரங்களை சரிபார்ப்பது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக விவசாயிகள் pmkisan.tn. gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து மொபைல் போனுக்கு வரும் கடவு எண் மூலம் வரும் 15-ம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும் என்று தேனி ஆட்சியர் க.வீ.முரளீதரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x