Published : 21 Apr 2016 08:11 AM
Last Updated : 21 Apr 2016 08:11 AM

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது: 29-ம் தேதி வரை தாக்கல் செய்யலாம்

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக் கான வேட்பு மனுத்தாக்கல் நாளை (22-ம் தேதி) தொடங்குகிறது. வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடமும் வழங்கலாம் என தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு மே 16-ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் போட்டி யிடும் வேட்பாளர்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை (22-ம் தேதி) தொடங்குகிறது. 29-ம் தேதி வரை மனுக்கள் தாக்கல் செய்யலாம். மனுக்கள் பரிசீலனை 30-ம் தேதி தொடங்குகிறது. மே 2-ம் தேதி வரை மனுக்களை வாபஸ் பெறலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:

வேட்பு மனுத்தாக்கல் செய் வதற்கு வசதியாக, தொகுதியி லேயே தேர்தல் நடத்தும் அதிகா ரிக்கு அலுவலகம் அமைக்கப் பட்டுள்ளது. இது தவிர, முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி நியமிக்கப்படுகின்றனர். இதில், முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்திலும் வேட் பாளர்கள் மனுத்தாக்கல் செய்யலாம்.

வேட்பு மனுத்தாக்கலுக்கான விண்ணப்பங்களை, தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகங் களில் இருந்து பெறலாம். தேர்தல் ஆணைய இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்யலாம்.

வேட்பு மனுத்தாக்கல் செய்யும் போது, கட்சி வேட்பாளராக இருந் தால், அக்கட்சியின் சார்பில் வழங்கப்பட்ட படிவம், சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரம், வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதற்கான ஆதாரம், ‘ஸ்டாம்ப்’ அளவிலான புகைப் படங்களையும் வேட்பாளர்கள் அளிக்க வேண்டும். இப்புகைப்படம், மின்னணு இயந்திரத்தில் இடம் பெறும்.

ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதி களில் மனுத்தாக்கல் செய்யலாம். ஒரு தொகுதியில் அவர் 4 மனுக்கள் வரை அளிக்கலாம். சரியான தகவல் கொண்ட ஒரு மனு மட்டும் பரிசீல னைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

மனுத்தாக்கலின் போது, அலுவலகத்தில் இருந்து 100 மீட்டருக்குள் 3 வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மனுத் தாக்கல் செய்ததும் வேட்பாளரின் அடிப்படை தகவல், தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றப்படும். அவரது பிரமாணப் பத்திரம் உள்ளிட்ட தகவல்கள் அடுத்த 24 மணி நேரத் துக்குள் இணையதளத்தில் இடம் பெறும்.

வேட்பு மனுத்தாக்கல் முடிந்ததும், அலுவலகத்தை விட்டு வெளியே வரும்போது, ‘ஓட்டுக்கு பணம் கொடுக்கமாட்டேன்’ என்ற உறுதி மொழியை வேட்பாளர் விருப் பப்பட்டால் எடுத்துக் கொள்ளலாம்.

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்போது, ஒரு தொகுதி யில் 63 வேட்பாளர்கள், ஒரு நோட்டா என 64 வேட்பாளர்கள் இருந்தால், மின்னணு இயந்திரம் பயன்படுத்தப்படும். அதிகமாக இருந்தால், வாக்குச்சீட்டு முறை பயன்படுத்தப்படும்.

தற்போது அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, தமிழகம் முழுவதும் 9 வருமானவரித்துறை அதிகாரிகள், 2 ஐஏஎஸ் மற்றும் ஒரு ஐபிஎஸ் என 12 அதிகாரிகள் வந்துள்ளனர். இவர்கள் 24-ம் தேதி வரை தமிழகத்தில் பணியாற்றுவர்.

தொடர்ந்து, தொகுதிக்கு ஒருவர் என 234 செலவின பார்வை யாளர்கள், 117 பொது பார்வை யாளர்கள், 32 காவல்துறை பார்வை யாளர்கள், 118 பயிற்சி ஐபிஎஸ் அதிகாரிகள் என 501 பேர் 27-ம் தேதிக்குள் தமிழகம் வந்து பணியில் சேர்வார்கள். இதைத் தொடர்ந்து மே 1-ம் தேதி முதல் பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக் குழுக் களின் கண்காணிப்பு மற்றும் சோத னைப் பணிகள் தீவிரப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பார்வையாளர்கள் யார்?

தேர்தல் பார்வையாளர்களை பொறுத்தவரை, வேட்பாளர்களின் மனுக்களை ஆய்வு செய்து, இறுதி செய்யும் பணியையும் செய் கின்றனர். தமிழகத்தை சொந்த மாநிலமாக கொண்டவர்களை யும், தமிழகத்தில் பணியாற்றும் வேற்று மாநில அதிகாரிகளையும் பார்வையாளர்களாக தேர்தல் ஆணையம் நியமிப்பதில்லை. இதர மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள்தான் நியமிக்கப்படு கின்றனர்.

ராஜேஷ் லக்கானி அறிவுறுத்தல்

வேட்பாளர்கள் தேர்தல் அறிவிக்கை வெளியிடப்படும் நாளுக்கு (ஏப்ரல் 22-ம் தேதி) 3 மாதங்களுக்கு முன் எடுக்கப் பட்ட புகைப்படத்தை அளிக்க வேண்டும். புகைப்படம் 2 செமீ அகலம், 2.5 செமீ உயரம் கொண்ட தாகவும், வெள்ளை, வெளிர் சாம்பல் நிற பின்னணியுடன், முழு முகமும், கண்கள் திறந்த நிலையில், இயல்பான முகத் தோற்றத்துடன் இருக்க வேண்டும். கருப்பு வெள்ளை, வண்ண புகைப்படமாக இருக்கலாம். இயல்பான உடையில் இருக்க வேண்டும். சீருடையில் எடுக்கப்பட்டது அனுமதிக்கப்பட மாட்டாது. குல்லாய், தொப்பி அணிந்திருப்பது, அடர் வண்ணக் கண்ணாடி அணிந்த புகைப்படங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என தமிழக தலைமை அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x