

திருப்பூர் அருகே புதிதாக தரம்உயர்த்தப்பட்ட திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உள்ளாட்சித் தேர்தலில் 27 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
திமுக 9, மார்க்சிஸ்ட் கட்சி 3,இந்திய கம்யூனிஸ்ட் 5 என மொத்தம்17 இடங்களில் வெற்றிபெற்றது.
அதிமுக 10 இடங்களில்வென்றிருந்தது. இந்நிலையில்,திமுக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருமுருகன்பூண்டி நகர்மன்றத் தலைவர் பதவிஒதுக்கீடு செய்யப்பட்டது.இதையடுத்து நகர்மன்றத் தலைவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைசேர்ந்த பி. சுப்பிரமணியம் அறிவிக்கப்பட்டார். நேற்று காலை தொடங்கிய மறைமுகத் தேர்தலில்பி.சுப்பிரமணியமும், இவரை எதிர்த்து திமுகவில் 26-வது வார்டு உறுப்பினர் குமாரும் போட்டியிட்டனர். இதில், சுப்பிரமணியத்துக்கு 12 வாக்குகளும், குமாருக்கு 15 வாக்குகளும் கிடைத்தன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 5 கவுன்சிலர்கள் இருந்த நிலையில், திமுகவுக்கு ஆதரவாக அவர்கள் செயல்பட்டுள்ளதாகவும், திமுக கூட்டணி தர்மத்தை மீறியதாகவும், கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். அதேபோல, நகர்மன்றதுணைத் தலைவர் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ராஜேஸ்வரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.