

கீழ்குந்தா பேரூராட்சி தலைவருக்கான திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் நாகம்மாளை எதிர்த்துசுயேச்சை வேட்பாளர் சத்தியவாணி வேட்புமனு தாக்கல் செய்தார். இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதால், சிறிது நேரம் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டது. பின்னர், நடத்தப்பட்ட வாக்குப்பதிவில் சத்தியவாணி 9 வாக்குகளும், நாகம்மாள் 6 வாக்குகளும் பெற்றனர். இதனால், பேரூராட்சி தலைவராக சத்தியவாணி தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவராக காங். வேட்பாளர் நேரு, போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
முன்னதாக, கீழ்குந்தா பேரூராட்சி உறுப்பினராக தேர்வான சுயேச்சை வேட்பாளர் சத்தியவாணி, பின்னர் நீலகிரி எம்.பி. ஆ.ராசா முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இருப்பினும், தற்போது நடைபெற்ற தலைவர் தேர்தலில் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு வென்றார் என்பதுகுறிப்பிடத்தக்கது.இந்நிலையில், உதகையிலுள்ள மாவட்டதிமுக அலுவலக நுழைவுவாயிலில் நேற்று மாலை நாகம்மாளும், அவரது கணவரும்உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.