

மதுரையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால், நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட் டது. நகரில் ஒரு குடம் சுத்திகரிக் கப்பட்ட குடிநீர் 10 ரூபாய்க்கு விற்கிறது.
மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளில் மொத்தம் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக் கின்றனர். வைகை அணையில் இருந்து தினமும் 115 எம்எல்டி தண் ணீர் எடுக்கப்படுகிறது. தற்போது வைகை அணையின் நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருவதால், மாநகராட்சியில் ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் விநியோகிக் கப்படுகிறது.
மாநகராட்சி நடவடிக்கையில்லை
குறைந்த அளவில் தண்ணீர் விடப்படுவதால் மேட்டுப்பகுதியில் உள்ள வார்டுகளுக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்படு கிறது. விஐபிகள், தொழில் அதிபர் கள், ஹோட்டல், லாட்ஜூகளில், தனியார் நிறுவனங்களில் மின் மோட் டார்களை வைத்து சட்டவிரோதமாக குடிநீரை உறிஞ்சுவதால் கடைசி பகுதிகளுக்கு தண்ணீர் வருவ தில்லை என குற்றம்சாட்டப் படுகிறது. மின்மோட்டார்களை பறி முதல் செய்ய மாநகராட்சி நட வடிக்கை எடுப்பதில்லை எனவும் புகார் கூறப்படுகிறது.
மாநகராட்சி ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 135 லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால், தற் போது 90 லிட்டர் கிடைப்பதே அபூர்வ மாகி விட்டது.
அதனால், ஒரு குடம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை ரூ.10-க்கு வாங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல், பெரும் பாலான பகுதிகளில் வீடுகளில் ஏனைய பயன்பாடுகளுக்காக ரூ.400 செலவில் லாரி தண்ணீரை (2 ஆயிரம் லிட்டர்) வாங்கும் நிலை உள்ளது.
தேர்தல் நேரத்தில் உருவாகி யுள்ள குடிநீர் பிரச்சினை அரசியல் கட்சிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
நிலத்தடி நீர்மட்டம் குறைவு
மாநகராட்சி பகுதியில் குறைந்த பட்சம் 300 அடி முதல் அதிகபட்சம் 1000 அடி ஆழத்துக்கு கீழ் நிலத் தடி நீர்மட்டம் சென்றுவிட்டது. அதனால், மாநகராட்சி போதிய குடிநீரை வழங்கினாலும், அனைத்து பயன்பாடுகளுக்கும் இந்த தண் ணீரை மக்கள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளதால், கடைசி பகுதி களுக்கு குடிநீர் செல்லாமல் செயற்கையாகக் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மேலும் அதிகரிக்கும் அபாயம்
கே.கே.நகர், அண்ணாநகர், கோமதிபுரம், டி.ஆர்.ஓ, காலனி, புதூர் நகர் பகுதிகளில் சராசரியாக 600 அடி முதல் 1000 அடிக்கு கீழ் நிலத்தடி நீர் சென்று விட்டது. அதனால், 10 நிமிடம் கூட மோட் டாரை பயன்படுத்த முடியவில்லை. மழைபெய்து நிலத்தடி நீர் அதி கரிக்காவிட்டால் இப்பகுதியில் தண்ணீர் பிரச்சினை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்று அதிகாரிகள் கூறினர்.