கடலூர் திமுக மேயர் வேட்பாளருக்கு எதிராக கட்சி மாவட்ட பொருளாளர் மனைவி மனுத்தாக்கல்

கடலூர் மாநகாட்சி
கடலூர் மாநகாட்சி
Updated on
2 min read

கடலூர்: கடலூர் மாநகராட்சியில் மேயர் தேர்தலில் திமுக வேட்பாளருக்கு எதிர்ப்பாக திமுக மாவட்ட பொருளாளர் மனைவி மனுத்தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாநகராட்சி உள்ள 45 வார்டுகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி 36வார்டுகளை கைப்பற்றியது. இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி முதல் பெண் மேயர் இடத்தை பிடிக்க திமுக நகர செயலாளர் ராஜா மனைவி சுந்தரிக்கும், திமுக மாவட்ட பொருளாளர் குணசேகரன் மனைவி கீதாவுக்கும் பலத்த போட்டி இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் திமுக தலைமை கடலூர் மாநகராட்சி மேயர் வேட்பாளராக சுத்தரியை அறிவித்தது. இதனையொடுத்து கடலூரில் உள்ள நகர திமுக அலுவலகத்தில் தொண்டர்கள் வெடிவெடித்துக் கொண்டடினர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திமுக கவுன்சிலர்கள் 25க்கும் மேற்பட்டோர் அவசரமாக, ரகசியமாக, வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டு புதுச்சேரியில் அருகே மரக்காணம் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் வைக்கப்பட்டுள்ளதாக செய்தி பரவியது.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் கடலூர் திமுக மாவட்டப் பொருளாளர்
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் கடலூர் திமுக மாவட்டப் பொருளாளர்

இது கடலூர் நகரம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்தநிலையில் நள்ளிரவில் போலீஸார் ஓட்டலுக்கு சென்று ஐந்து, ஐந்து பேராக அழைத்து வந்தனர். இதில் 7 பேர் வரவில்லை. நேற்று காலை 10 மணிக்கு கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் பதவிக்கான தேர்தல் நடந்தது.

இதனையொட்டி மாநகராட்சி அலுவலக முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. திமுக உறுப்பினர்கள் 26 பேர், காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்கள் மூன்று பேர், பாமக, பாஜக உறுப்பினர்கள் தலா ஒருவர் வீதம் மொத்தம் 32 பேர் தேர்தல் நடத்தும் அறைக்கு வந்திருந்தனர்.

தேர்தல் நடத்தும் மாநகராட்சி ஆணையாளர் விசுவநாதன் மேயர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுபவர்கள் மனு அளிக்கலாம் என்று அறிவித்தார். இதனையடுத்து திமுக நகர செயலாளர் ராஜாவின் மனைவி சுந்தரியும், திமுக மாவட்ட பொருளாளர் குணசேகரன் மனைவி கீதாவும் வேட்புமனு அளித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கவுன்சிலர்கள் வாக்களித்து வருகின்றனர்.

அதிமுக கவுன்சிலர்கள் 6 பேரும் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர். இந்த நிலையில் தனது மனைவிக்கு மேயர் சீட்டு கிடைக்கவில்லை என்று திமுக மாவட்ட பொருளாளர் குணசேகரன் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்று கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in