Published : 04 Mar 2022 06:38 AM
Last Updated : 04 Mar 2022 06:38 AM
சென்னை: மதிமுக, மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சிகளில் மறைமுக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கை: திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி துணை மேயர் பதவிக்கு எஸ்.சூரியகுமார் போட்டியிடுகிறார். மற்ற வேட்பாளர்கள் விவரம்:நகராட்சித் தலைவர்: செங்கல்பட்டு மாவட்டம் மாங்காடு - சுமதி முருகன். நகராட்சி துணைத் தலைவர்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி - கேஏஎம் குணா, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி - ஆர்.எஸ்.ரமேஷ், கரூர் மாவட்டம் குளித்தலை - கே.கணேசன்.
பேரூராட்சித் தலைவர்: தென்காசி மாவட்டம் திருவேங்கடம் - த.பாலமுருகன், தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை - இரா.சரவணன், ஈரோடு மாவட்டம் சென்னசமுத்திரம் - கு.பத்மா. பேரூராட்சிதுணைத் தலைவர்: திண்டுக்கல் மாவட்டம் பாளையம் - வி.லதா, ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை - லோ.சோமசுந்தரம், அரச்சலூர் - ச.துளசிமணி.
மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திமுகவுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ள இடங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்:
மதுரை மாநகராட்சி துணை மேயர் - டி.நாகராஜன். நகராட்சித் தலைவர்கள்: திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி - பி.சுப்பிரமணியம், கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு - ஆர்.லலிதா. நகராட்சி துணைத் தலைவர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி - எஸ்.ராமலோக ஈஸ்வரி, கடலூர் மாவட்டம் சிதம்பரம் - முத்துக்குமரன், திண்டுக்கல் மாவட்டம் பழநி - கே.கந்தசாமி.
பேரூராட்சி தலைவர்: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் - என்.சிவராஜன். பேரூராட்சி துணைத் தலைவர்: திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் - பெ.கீதா, ஈரோடு மாவட்டம் அந்தியூர் - எஸ்.கீதா, திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை - எம்.மலைச்சாமி, திருச்சி மாவட்டம் தொட்டியம் - ரா.கலைச்செல்வி, தேனி மாவட்டம் பண்ணைபுரம் - எஸ்.சுருளிவேல், புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் - எம்.மகாலட்சுமி, திருப்பூர் மாவட்டம் தளி - ஜி.செல்வன், நீலகிரி மாவட்டம் தேவர்சோலை - எ.வி.ஜோஸ்.
திருமாவளவன் நன்றி
சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டார். அதன் விவரம்:
கடலூர் மாநகராட்சி துணை மேயர் -தாமரைச்செல்வன். நகராட்சி தலைவர்கள்: ஜெயங்கொண்டம் - சுமதி சிவக்குமார், நெல்லிக்குப்பம் - கிரிஜா திருமாறன். நகராட்சி துணை தலைவர்கள்: திண்டிவனம் - ராஜலட்சுமி வெற்றிவேல், பெரியகுளம் - பிரேம்குமார், ராணிப்பேட்டை - சீ.மா.ரமேஷ்கர்ணா. பேரூராட்சி தலைவர்கள்: பெண்ணாடம் - அமுதலட்சுமி ஆற்றலரசு, காடையாம்பட்டி - குமார், பொ.மல்லாபுரம் - சின்னவேடி. துணைத் தலைவர்கள்: கடத்தூர் - வினோத், திருப்போரூர் - பாரதிசமரன், புவனகிரி - லலிதா, கொளத்தூர் - கோவிந்தம்மாள் அம்மாசி, வேப்பத்தூர் - பொன்.கி.காமராஜ், அனுமந்தன்பட்டி - ஆரோக்கியசாமி, ஓவேலி - சகாதேவன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ‘‘கடலூர் மாநகராட்சி மேயர்பதவி, 9 துணை மேயர்பதவிகள் கேட்டோம். கடலூர்மாநகராட்சி துணை மேயர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு துணை மேயர் உட்பட16 பதவிகளை ஒதுக்கியதற்காக முதல்வருக்கு நன்றி. இத்தேர்தல் தோல்வியால் அதிமுக வாக்குவங்கி சரிந்துவிட்டது என கூற முடியாது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT