Published : 04 Mar 2022 07:15 AM
Last Updated : 04 Mar 2022 07:15 AM
மதுரை: ஐபிஎல் போட்டிக்கு கிரிக்கெட் வீரர்களை ஏலம் எடுப்பதுபோல் ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு நடைபெறுவது தொடர்பாக அரசு கண்டிப்பாக விளக்கம் அளிக்க வேண்டும் எனஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம்,ஆலங்குளம் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் டே விட்லியோ,இடமாறுதல் தொடர்பான கல்வித்துறை அதிகாரிகளின்உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்துநீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த இடைக்கால உத்தரவு: இந்த வழக்கு விசாரணையின்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்தவழக்கறிஞர், ஆசிரியர்கள் இடமாறுதலில் பெரும் முறைகேடுகள் நடப்பதாகவும், லஞ்சத்தின் அடிப்படையில் மட்டுமே இடமாறுதல் நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.
ரூ.10 லட்சம்
இடமாறுதலில் குறிப்பிட்ட இடம், பணி பெற ரூ.10 லட்சம் மற்றும் அதற்கு மேலும் லஞ்சம் வாங்குகிறார்கள் என்றும் தெரிவித்தார். ஆசிரியர்கள் இடமாறுதல் தொடர்பான பல்வேறு வழக்குகளிலும் இதே கருத்தை வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
ஆசிரியர் இடமாறுதல் மற்றும் நியமனம் ஆகியனஐபிஎல் கிரிக்கெட்போல் நடைபெறும்போது, கல்வித் துறையின் நலன் கருதி அரசு கண்டிப்பாக விளக்கம் தரவேண்டும். ரூ.10 லட்சம்அதற்கு மேல் பணம் வாங்கிக்கொண்டு ஆசிரியர்கள் இடமாறுதல், நியமனம் நடைபெற்றால் அந்த ஆசிரியர்கள் பள்ளிகளில் எந்த மாதிரியை கல்வி கற்பிப்பார்கள், குழந்தைகளுக்கு எந்த மாதிரியான ஒழுக்கத்தை கற்பிப்பார்கள்? இந்த செயல்கள் தென் மாவட்டங்களில் மிகச் சாதாரணமாக நடைபெறுகின்றன.
பேரழிவுக்கு வழிவகுக்கும்
இந்த நிலைமை உண்மையில் கவலைக்குரியது. இந்த நிலை தொடர்வது பேரழிவுக்கு வழிவகுக்கும். இதில் கல்வித் துறை முதன்மைச் செயலர், துறைத்த லைவர்கள் கவனம் செலுத்துவதில்லை.
எனவே, இந்த வழக்கில்ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநர் 7-வது எதிர் மனுதாரராக சேர்க்கப்படுகிறார். விசாரணை இன்றைக்கு தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT