Published : 11 Apr 2016 08:07 AM
Last Updated : 11 Apr 2016 08:07 AM

2-வது பட்டியல் வெளியீடு: 30 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் அறிவிப்பு - விருகம்பாக்கத்தில் தமிழிசை போட்டி

தமிழகத்தில் 30 தொகுதிக ளுக்கான பாஜகவின் 2-வது வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தான் வசிக்கும் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி 54 தொகு திகளுக்கான முதல்கட்ட வேட் பாளர் பட்டியலை பாஜக கடந்த 25-ம் தேதி வெளியிட்டது. அதில் பாஜக தேசிய செய லாளர் ஹெச்.ராஜா, மாநில துணைத்தலைவர்கள் வானதி ஸ்ரீனிவாசன், கருப்பு முரு கானந்தம், சக்கரவர்த்தி உள் ளிட்டோர் இடம்பெற்றிருந் தனர். இந்நிலையில், 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமை நேற்று வெளி யிட்டது.

இது தொடர்பாக பாஜக மத்திய தேர்தல் குழுவின் செய லாளர் ஜே.பி.நட்டா வெளி யிட்ட அறிவிப்பு:

தமிழகத்தின் 30 தொகுதிக ளுக்கான 2-ம் கட்ட பாஜக வேட்பாளர் பட்டியல் வெளி யிடப்படுகிறது. வேட்பாளர்கள் விவரம்:

விருகம்பாக்கம் தமிழிசை சவுந்தரராஜன் (மாநில தலைவர்), திருவள்ளூர் - ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன், வில்லிவாக்கம் - எம்.ஜெய் சங்கர் (மத்திய சென்னை முன் னாள் மாவட்ட செயலாளர்), துறைமுகம் - கிருஷ்ணகுமார் நதானி, அண்ணா நகர் - சுரேஷ் கருணா, மயிலாப்பூர் - கரு.நாகராஜன் (சமக முன்னாள் பொதுச் செயலாளர்), திருப் போரூர் - வி.ஜி.ரங்கசாமி, ஏற்காடு (தனி) - பொன் ராசா, சங்ககிரி - ஏ.சி.முரு கேசன், சேலம் வடக்கு - கோபி நாத், மொடக்குறிச்சி - கிருஷ்ண குமார், தாராபுரம் (தனி) - என்.சண்முகம், மேட்டுப்பாளை யம் - வி.பி ஜெகநாதன், பல்லடம் - தங்கராஜ், கவுண்டம் பாளையம் - ஆர்.நந்தகுமார் திண்டுக்கல் திரு மலை பாலாஜி, காட்டுமன்னார் கோவில் (தனி) - டாக்டர் எஸ்.பி.சரவணன், மயிலாடுதுறை - சி.முத்துக்குமார், மன்னார் குடி - சிவகுமார் என்ற பேட்டை சிவா, தஞ்சாவூர் - எம்.எஸ்.ராம லிங்கம், கந்தர்வக்கோட்டை (தனி) - புரட்சி கவிதாசன்.

காரைக்குடி - முத்துலட்சுமி, மதுரை தெற்கு - ஏ.ஆர்.மகாலட்சுமி, திருப்பரங்குன்றம் - ஆறுமுகம் பிள்ளை, சிவ காசி - ஜி.பார்த்தசாரதி, அருப் புக்கோட்டை - ஆர்.வெற்றி வேல், ராமநாதபுரம் - துரை கண்ணன், ஸ்ரீவைகுண்டம் - செல்வராஜ், தென் காசி - பி.செல்வி, ராதா புரம் - கனி அமுதா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப் படுகின்றனர்.

இவ்வாறு அந்த அறிவிப் பில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் தமிழிசை உட்பட 5 பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x