

புதுச்சேரியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான தகவல்கள் தேசிய குற்ற ஆவண காப்பக விவரத்தில் தவறாகவே உள்ளது. புதுச்சேரியில் குழந்தைகளுக்கு ஏதிராக சைபர் கிரைம் குற்றங்களே நடக்க வில்லை என்றும் அதில் தெரிவிக்கப் பட்டுள்ளதாக தன்னார்வ அமைப் புகள் சுட்டி காட்டியுள்ளன.
முக்கிய சுற்றுலாத் தலங்களில் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர் பாக இரு நாள் ஆய்வரங்கை தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் கண்காணிப்பகம், ஹோப்மற்றும் இக்வேசன்ஸ் அமைப்புகள்செய்திருந்தன. வழக்கறிஞர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் எனபல்வேறு தரப்பினருடன் ஆலோ சித்தனர். அதைத்தொடர்ந்து தமிழ்நாடு குழந்தைகள் மையங்கள்கண்காணிப்பக மாநில அமைப்பா ளர் ஆண்ட்ரூ சேசுராஜ் கூறிய தாவது:
குழந்தைகளை பாதுகாப்பது தொடர்பாக ஆய்வுகளை மேற் கொண்டு கலந்துரையாடி வருகி றோம். புதுச்சேரியில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இல்லை. இப்பிரிவு நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் உள் ளதை போல் புதுச்சேரியிலும் தேவை. காவல்நிலையங்களிலும் குழந்தைகள் தொடர்பான வழக்கைதனியாக கையாள அதிகாரிகள் இல்லை. பள்ளிகளில் இடைநின் றோரை தொடர்பு கொண்டு மீண்டும் அவர்களை சேர்க்கும் நடவடிக்கையும் இல்லை.
புதுச்சேரியில் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் தொடர்பான தகவல்கள் தவறாகவே தேசிய குற்றஆவண காப்பகத்துக்கு தரப் பட்டுள்ளன.
புதுச்சேரியில் குழந்தைகளுக்கு ஏதிராக சைபர் கிரைம் குற்றங் களே நடக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ல், பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும், 16 முதல் 18 வயது வரை44 பேர் மட்டுமே பாதிக்கப்பட் டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
அதேபோல் நாடு முழுவதும் போக்சோ பிரிவில், குழந்தைகள் மீதான அத்துமீறலில் அக்குழந் தையை நன்கு அறிந்தவர் இந்த குற்றங்களில் ஈடுபடுவது குறித்தபுள்ளி விவரங்கள் உள்ளன. ஆனால், 18 வயதுக்கு குறைவா னோர் பாதிக்கப்பட்ட வழக்குகளில், புதுச்சேரியில் ஒருவர் கூட குழந்தைகளுக்கு முன்பு அறிந்தவர் என தெரிவிக்கப்படவில்லை. வயது வந்தோரில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், குழந்தை களில் சிறுவர்களை விட சிறுமியர் எண்ணிக்கை குறைவாகவே உள்ள தாக குறிப்பிடப்பட்டுள்ளது’‘ என்று குறிப்பிட்டார்.
பேட்டியின் போது ஹோப் நிறுவனத்தின் விக்டர்ராஜ், இக்வேசன்ஸ் அமைப்பின் சுகோத்ரா பிஸ்வாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
குழந்தைகள் தொடர்பான வழக்கை தனியாக கையாள அதிகாரிகள் இல்லை.