

அரசு விழுப்புரம் மருத்துவக் கல்லுாரியில் மகப்பேறு பிரிவில் கருப்பை தமனி எம்போலைசேஷன் என்ற நவீன அறுவை சிகிச்சை மேற்கொண்டு டாக்டர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
திண்டிவனத்தைச் சேர்ந்தவர் வரதராஜ். தச்சு தொழிலாளியான இவரது மனைவி சத்யா (22). கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் தேதி மகப்பேறு சிகிச்சை பிரிவில் பிரசவத்திற்காக அனு மதிக்கப்பட்டார். சிக்கலான பிரசவத்தால் டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தனர்.
குழந்தை பிறந்த பிறகும் அவர் தொடர்ந்து ரத்த போக்கால் அவதிப்பட்டதால் ஸ்கேன் செய்தனர். அப்போது அவருக்கு கருப்பை தமனி மாறுபாடு என்ற அரிய வகை நோய் தாக்கியிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கல்லுாரி முதல்வர் குந்தவி தேவி ஆலோசனை பேரில் மகப்பேறு துறை தலைவர் ராஜேஸ்வரி தலைமையில் டாக்டர்கள் சித்ராதேவி, சங்கீதா, தேவி, ரத்தநாள சிறப்பு டாக்டர் சுப்பராயன், மயக்கவியல் துறை தலைவர் அருண்சுந்தர்,கதிரியக்க துறை தலைவர் மோகன சுந்தரம் மற்றும் செவிலியர்கள் கொண்ட குழுவினர் உடனடியாக சத்யாவிற்கு ”கருப்பை தமனி எம்போலைசேஷன்” என்ற நுட்ப மான அறுவை சிகிச்சையை கருப்பையை அகற்றாமல் வெற்றிகரமாக செய்தனர். அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் குழுவினரை கல்லுாரி முதல்வர் குந்தவி தேவி பாராட்டி கூறியதாவது:
சத்யாவிற்கு தமிழக முதல் வரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் இந்த நுட்பமான அறுவை சிகிச்சையை டாக்டர்கள் நவீன முறையில் வெற்றிகரமாக செய் துள்ளனர்.
தற்பொழுது நோயாளி சத்யாநலமுடன் உள்ளார். இந்த அறுவை சிகிச்சையை தனியார்மருத்துவமனைகளில் செய்திருந் தால் ரூ. 1 லட்சத்திற்கும் மேலாகியிருக்கும். விழுப்புரம் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் இந்த அறுவை சிகிச்சை முதன்முதலாக செய்தது, பல உயிர்காக்கும் திட்டத்தின் முன்னோடியாக கருதப்படுகிறது" என்றார்.