Published : 04 Mar 2022 07:52 AM
Last Updated : 04 Mar 2022 07:52 AM

கடலூர் மேற்கு மாவட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே-வின் ஆதரவாளர்கள் ஓரங்கட்டப்பட்டனரா?

விருத்தாசலம்

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மூலம் கடலூர் மாவட்ட திமுகவில், கிழக்கு மாவட்டச் செயலாளரான அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் ஓரங்கட்டப் பட்டுள்ளதாக பேசப்படுகிறது.

கடலூர் மாவட்டத்தில் திமுக வின் பலம் வாய்ந்த மாவட்டச் செயலாளராக வலம் வருபவர் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின் திமுகவில் மாற்றம் செய்யப்பட்டு, கடலூர் மாவட்டம் கிழக்கு, மேற்கு என பிரிக்கப்பட்டது. கடலூர் திமுக கிழக்கு மாவட்டச் செயலாளராக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும், மேற்கு மாவட்டச் செயலாளராக அமைச்சர் சி.வெ.கணேசனும் செயல்படுகின்றனர். கட்சியின் நிர்வாக வசதிக்காக மாவட்டம் இரு பிரிவாக பிரிக்கப்பட்டது.

அந்த வகையில் கடலூர், குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், புவன கிரி, காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட 5 தொகுதிகள் கடலூர்கிழக்கு மாவட்டத்திலும், பண் ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய 4 தொகுதிகள் மேற்கு மாவட்டத்திற்கும் ஒதுக் கப்பட்டன.

ஆனாலும் மேற்கு மாவட் டத்தில் இருக்கும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள், அமைச்சர் கணேச னின் செயல்பாடுகளை விமர்ச னத்துக்குள்ளாக்கி வந்தனர். இவற்றை கணேசனும் கண்டும் காணாமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மேற்கு மாவட்டத்தில் உள்ள, எம்ஆர்கேவின் ஆதரவாளர்கள் தங்களுக்கும் சீட் கேட்டு போட்டியிட்டனர். அந்த வகையில் எம்ஆர்கே.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களாக கருதப்படும் விருத்தாசலம் நகராட்சி 3-வார்டில் போட்டியிட்ட குருசரஸ்வதி, 27-வது வார்டில் போட்டியிட்ட ராமு, 5-வது வார்டில் போட்டியிட்ட அரங்க பாலகிருஷ்ணன் ஆகியோர் தோல்வியை தழுவினர்.

அதேநேரத்தில், பண்ருட்டி நகராட்சியில் எம்.ஆர்.கே.வின்ஆதரவர்களாக 6-வது வார்டில்போட்டியிட்ட அனிதா தோல் வியை தழுவ, 8-வது வார்டில் போட்டியிட்ட ஆனந்தி, 26-வது வார்டில் போட்டியிட்ட நகரச் செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

பண்ருட்டி நகராட்சியில் எம்.ஆர்.கே. ஆதரவாளர்கள் இருவர் வெற்றி பெற்ற நிலையில், ராஜேந்திரன் மற்றும் ஆனந்திக்கும் இடையே நகர்மன்ற தலைவர் பதவிக்கு போட்டி என கட்சியினர் மத்தியில் பேசப்பட்டது.

இதனிடையே திமுக சார்பில் நேற்று அறிவிக்கப்பட்ட பண்ருட்டி நகர்மன்ற தலைவர் வேட்பாளராக நெய்வேலி சட்டப்பேரவை உறுப் பினர் சபா.ராஜேந்திரனின் ஆதரவாளரான சிவா, துணைத் தலைவர் பதவிக்கு எம்.ஆர்.கே. ஆதரவாளர் ராஜேந்திரன் ஆகியோர் அறிவிக்கப் பட்டுள்ளனர்.

கடலூர் திமுக மேற்கு மாவட்டத்தில் தன்னை உதாசீனப் படுத்தியவர்களை, உள்ளாட்சித் தேர்தல் மூலம் அமைச்சர் கணேசன் ஓரங்கட்டிவிட்டார் என்கின்றனர் அவரின் ஆதரவாளர்கள்.

தேர்தலின் போது எம்.ஆர்.கே ஆதரவாளர்களுக்கு சீட் வழங்கிய போது, இதற்கு அமைச்சர் கணேசனிடம் அவரது ஆதரவாளர்கள் அதிருப்தி தெரி வித்தனர். அவர்களை கணேசன் சமாதானம் செய்தார்.

ஆனால் தேர்தலில் போட்டியிட்ட எம்.ஆர்.கே.ஆதரவாளர்களில் சிலர் தோற்க, ஒரு சிலர் வெற்றி பெற்றனர். இதில் பண்ருட்டி நகராட்சியில் வெற்றி பெற்றவர்களில் ஆனந்தியும், ராஜேந்திரனும் தங்களுக்குத் தலைவர் பதவி வழங்க வேண்டும் என கணேசனுக்கு, அமைச்சர் கே.என்.நேரு மூலம் நெருக்கடி கொடுத்துள்ளனர்.

ஆனால் கணேசனோ, தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும் என இந்த விஷயத்தில் கறார் காட்டியுள்ளார். தான் நினைத்தவர்களுக்கு பதவியை வழங்கியதோடு, தருணம் பார்த்து மேற்கு மாவட்டத்தில் உள்ள எம்.ஆர்.கே. ஆதரவாளர்களை ஓரம் கட்டியுள்ளார் என்கின்றனர் கடலூர் மேற்கு மாவட்ட திமுகவினர்.

தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும் என இந்த விஷயத்தில் கறார் காட்டியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x