

கேரள சட்டப்பேரவைத் தேர் தலை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அங்கம் வகிக் கும் இடது முன்னணி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், முல்லை பெரியாறில் புதிய அணை கட்டப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராம கிருட்டிணன், கோவையில் செய் தியாளர்களிடம் கூறியதாவது:
முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை நீதிமன்ற உத்தர வின்படி 142 அடியாக உயர்த் தியுள்ள நிலையில், முழு கொள் ளளவான 152 அடிக்கு உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. இந்நிலையில், முல்லை பெரி யாறில் புதிய அணை கட்டப் படும் என மார்க்சிஸ்ட் கட்சி அங்கம் வகிக்கும் கேரள இடது முன்னணி தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்துக்குச் செய்யும் துரோகம் கண்டனத்துக்குரியது. எனவே கேரள இடது முன்ன ணியின் தேர்தல் அறிக்கை குறித்து தமிழகத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது நிலைப்பாட்டை தெளிவு படுத்த வேண்டும். மக்கள் நலக் கூட்டணியில் உள்ள மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளும் முல்லை பெரியாறு அணைக்காக போராடி வரு கின்றன. எனவே மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் அனைவ ரும் கேரள இடது முன்னணியின் தேர்தல் அறிக்கை மீதான தங்கள் நிலைப்பாட்டை தெரி விக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.