

தேமுதிக மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக விருதுநகர் மாவட்டத்தில் சிவ காசி, திருத்தங்கல், ஆர்.ஆர்.நகர், விருதுநகர், மல்லாங்கிணறு ஆகிய இடங்களில் தேமுதிக மகளிரணித் தலைவர் பிரமேலதா நேற்று பிரச்சாரம் செய்தார். சிவகாசியில் நடைபெற்ற கூட் டத்தில் அவர் பேசியதாவது:
லஞ்சம், ஊழலுக்கு அப்பாற் பட்ட தலைவர்கள் ஒன்று சேர்ந்த கூட்டணி இது. தமிழகத்தை முன்னேற்ற நாம் ஒன்று சேர வேண்டும். லஞ்சம், ஊழல் இல் லாத ஆட்சிக்கு நாங்கள் துணை நிற்போம் என சபதம் ஏற்க வேண்டும் கூட்டணி அமைச்சரவை ஏற்படுத்தப்படுவதால் மணல் கொள்ளை தடுக்கப்படும். வெளிப் படையாக அரசு செயல்படும். வேலைவாய்ப்புக்கு முக்கிய இடம் கொடுக்கப்படும். மக்க ளுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றி நாட்டில் முதன்மை யான மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.