திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன்

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் | கோப்புப் படம்.
முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் | கோப்புப் படம்.
Updated on
1 min read

சென்னை: கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுக பிரமுகரை அரை நிர்வாணமாக்கி தாக்கிய வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

சென்னை வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஜெயக்குமாரின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட நரேஷ்குமார் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டதாகவும், அதனால் கடுமையான நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டேன் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிடவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதன்பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், நிபந்தனை அடிப்படையில் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். திருச்சியில் தங்கியிருந்து, கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் இரண்டு வார காலத்திற்கு திங்கள், புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in