

விழுப்புரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் நேற்று பதவியேற்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் 3 நகராட்சிகள் 7 பேரூராட்சிகளுக்கு 208 பதவியிடங்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கு பதவியேற்பு விழா நேற்று நடந்தது. இதில், விழுப்புரம் நகராட்சி மற்றும் திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச் சியில் அமைச்சர் பொன்முடி, மாவட்ட ஆட்சியர் மோகன் ஆகி யோர் பங்கேற்றனர்.
அப்போது அமைச்சர் பொன்முடி பேசுகையில், "உள்ளாட்சியிலும், நல்லாட்சி தொடர வேண்டும் என்ற முதல்வர் உத்தரவை செயல் படுத்தும் விதமாக அனைத்து உறுப்பினர்களும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்ற வேண்டும்" என்றார்.
இதேபோல் செஞ்சி பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த பதவி யேற்பு விழாவில் பங்கேற்ற அமைச்சர் மஸ்தான் பேசுகையில், "முதல்வர் அறிவிக்கும் அனைத்து திட்டங்களையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பாடுபட வேண்டும்.
தினமும் பொதுமக்களை சந்தித்து அவர்களின் அனைத்து தேவைகளை யும், குறைகளையும் கேட்டறிந்து அதனை நிவர்த்தி செய்ய வேண்டும். அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்ற வேண் டும் என்றார்
இவ்விழாக்களில் எம்பி ரவிக்குமார், எம்எல்ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயசந்திரன், விழுப்புரம் நகராட்சி ஆணை யர் சுரேந்திர ஷா, செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
8 கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்தனர்
பேரூராட்சிகளில் அரகண்டநல்லூர் அதிமுக கவுன்சிலர் குமார், சுயேச்சைகளாக போட்டியிட்டு வெற்றி பெற்ற சுகி, திருவெண்ணெய்நல்லூர் கமலா, விக்கிரவாண்டி சுரேஷ், சுபா, நகராட்சிகளில் விழுப்புரத்தைச் சேர்ந்த சாந்தராஜ், அமுதா, திருக்கோவிலூர் சண்முகவள்ளி ஆகிய கவுன்சிலர்கள் நேற்று மாலை விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் அமைச்சர் பொன்முடி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். எம்எல்ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன், முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ், முன்னாள் நகர் மன்றத்தலைவர் ஜனகராஜ், மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் அன்னியூர் சிவா, நகர செயலாளர் சக்கரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.