கடலூர் மாவட்டத்தில் 447 கவுன்சிலர்கள் பதவி ஏற்பு

கடலூர் மாவட்டத்தில் 447 கவுன்சிலர்கள் பதவி ஏற்பு
Updated on
1 min read

கடலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற 447 கவுன்சிலர்கள் நேற்று பதவி ஏற்றனர்.

கடலூர் மாநகராட்சியில் 45 கவுன்சிலர்களும், நகராட்சிகளான நெல்லிக்குப்பத்தில் 30 கவுன் சிலர்களும், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலத்தில் தலா 33, வடலூரில் 27, திட்டக்குடியில் 24 கவுன்சிலர்களும் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். பேரூராட்சிகளான அண்ணாமலை நகர், கெங்கைகொண்டான், பெண்ணாடம், முஷ்ணம், சேத்தியாதோப்பு, லால்பேட்டை, மங்கலம் பேட்டை, தொரப்பாடி, மேல்பட்டாம்பாக்கம், கிள்ளை ஆகியவற்றில் தலா15 கவுன்சிலர்களும், காட்டுமன் னார்கோவில், பரங்கிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி, புவனகிரி பேரூராட் சிகளில் தலா 18 கவுன்சிலர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். அந்தந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் கவுன்சிலர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத் தனர். பதவி ஏற்பு நிகழ்ச்சியில் ஊர் முக்கிய பிரமுகர்கள், பொது மக்கள், முன்னாள் கவுன்சிலர்கள், அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

இதேபோல் கடலூர் மாநகராட்சிஅலுவலகத்தில் நேற்று காலை கவுன்சிலர்கள் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி மேயர் தேர்தல் தொடர்பாக அதிமுக நிர்வாகி ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அந்த வழக்கின் விசாரணை நேற்று 10.30 மணிக்கு நடைபெறுவதாக கூறப்பட்டது. இதனால் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு சிக்கல் ஏற்படலாம் என்று கருதிய அதிகாரிகள், காலை 10.30 மணிக்குள் பதவியேற்பு நிகழ்வை முடிக்க திட்டமிட்டனர். இதற்காக 5 முதல் 7 கவுன்சிலர்களை வரிசையாக நிற்க வைத்து பதவிப் பிரமாணம் மொத்தமாக எடுத்துக்கொள்ள வைத்தனர். இதனால் 20 நிமிடங்களில் பதவி யேற்பு முடிந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in