

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் 363 பேர் பதவி யேற்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சிவகாசி மாநகராட்சியில் 48 வார்டுகளில் வெற்றிபெற்ற கவுன்சி லர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து, இம்மாதம் 4-ம் தேதி நடைபெறும் மேயர் மற்றும் துணை மேயர் தேர்த லில் பங்கேற்க அனைத்து கவுன் சிலர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்தார். சிவகாசி மாநகராட்சியில் வெற்றி பெற்ற 11 அதிமுக கவுன்சிலர்களில் 9 பேர் திமுகவுக்குச் சென்றதால் பதவியேற்பு விழாவில் பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை நிலவியது.
இதனால் ஏராளமான போலீ ஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். எனினும், அமை தியான முறையில் பதவியேற்பு விழா முடிவடைந்தது. அதன் பின் திமுக கூட்டணியில் உள்ள கவுன்சிலர்கள் மற்றும் சமீ பத்தில் திமுகவில் இணைந்த அதிமுக கவுன்சிலர்கள் 9 பேர் உட்பட மொத்தம் 46 கவுன்சிலர்களும் சொகுசு பேருந்து மற்றும் வேன்களில் கன்னி யாகுமரிக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
நாளை மேயர், துணை மேயர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கவுன்சிலர்கள் அனைவரும் நகருக்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், நகராட்சிகளில் அருப்புக்கோட்டையில் 36 கவுன் சிலர்கள், ராஜபாளையத்தில் 42, சாத்தூரில் 24, வில்லிபுத்தூரில் 33, விருதுநகரில் 36 கவுன்சிலர்கள் பதவியேற்றுக் கொண்டனர். நக ராட்சி ஆணையர்கள் அவர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தனர்.
அருப்புக்கோட்டை நகராட்சியில் நடைபெற்ற பதவி யேற்பு விழாவை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பார்வையிட்டார். அதன் பின் அமைச்சர் முன்னி லையில் 30-வது வார்டு அதிமுக கவுன்சிலர் சுசிலாதேவி திமுகவில் இணைந்தார்.
ராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தில் பதவியேற்ற திமுக கவுன்சிலர்களுக்கு தென்காசி எம்பி தனுஷ்குமார், ராஜபாளையம் எம்எல்ஏ தங்கப் பாண்டியன் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.
பதவியேற்பு விழாவுக்குப் பின் ராஜபாளையம், வில்லிபுத்தூர் நகராட்சிகளின் திமுக கூட்டணி கவுன்சிலர்கள் அனைவரும் சொகுசு வேன்களில் குற்றா லத்துக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
செட்டியார்பட்டி, காரியாபட்டி, மல்லாங்கிணர், எஸ்.கொடிக்குளம், சுந்தரபாண்டியம், வ.புதுப்பட்டி பேரூராட்சிகளில் தலா 15 கவுன்சிலர்களும், வத்திராயிருப்பு மற்றும் மம்சாபுரத்தில் தலா 18 வார்டு கவுன்சிலர்களும் பதவி யேற்றுக் கொண்டனர். விருதுநகர் மாவட்டம் முழுவதும் மொத்தம் 363 கவுன்சிலர்கள் நேற்று பதவியேற்றனர்.