

மதுரை மாநகராட்சியில் 100 கவுன்சிலர்கள் பதவியேற்றுக் கொண்டனர். உறுதிமொழி ஏற்றுக்கொண்டபோது பலர் தங்கள் அபிமான தலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டனர்.
மதுரை மாநகராட்சியில் திமுக தனிப்பெரும் கட்சியாக 67 வார்டுகளையும், அதன் கூட் டணி கட்சிகளான காங்கிரஸ்- 5, மார்க்சிஸ்ட்- 4, மதிமுக- 3, விடுதலைச் சிறுத்தைகள் ஒரு வார்டிலும் வெற்றிபெற்றன.
அதிமுக 15 வார்டுகளையும், பாஜக ஒரு வார்டையும், சுயேச் சைகள் 4 வார்டுகளையும் கைப் பற்றியுள்ளன.
மாநகராட்சி மாமன்றக் கூட்ட ரங்கில் நேற்று நடந்த பதவியேற்பு விழாவில் புதிய கவுன்சிலர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் கார்த் திகேயன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அதில், சில கவுன்சிலர்களுக்கு தமிழில் இருந்த உறுதிமொழி வாச கத்தைப் படிக்கத் தெரியவில்லை. அதனால், மாநகராட்சி ஆணை யாளர் சொல்லச் சொல்ல, கவுன் சிலர்கள் அதை திரும்பச் சொல்லி பதவியேற்றுக் கொண்டனர்.
பொதுவாக பதவிப் பிரமா ணத்தின்போது உறுதிமொழி படிவத்தில் உள்ள வாசகங்களை மட்டும் கூறுவதுதான் மரபு. ஆனால், சில கவுன்சிலர்கள் தங்கள் கட்சித் தலைவர்களின் மீதுள்ள அபிமானத்தைக் காட்டும் வகை யில், உறுதிமொழி ஏற்பின்போது அவர்களது பெயர்களையும் குறிப் பிட்டனர்.
47-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற பானு முபாரக், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகரியின் ஆதர வாளர்.
இவரது கணவர் முபாரக் மந்திரி மு.க.அழகிரியின் நிழலாக இருந்தவர். நேற்று பதவியேற்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்ட போது, கருணாநிதி, அழகிரி, ஸ்டாலின் ஆகியோரின் ஆசியுடன் கவுன்சிலராக பொறுப் பேற்பதாகக் கூறினார்.
அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 64-வது வார்டு உறுப்பினர் ராஜா, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பெயரைக் குறிப்பிட்டு அவரது ஆசியுடன் பதவியேற்பதாக குறிப் பிட்டார்.
அதேபோல், திமுக கவுன்சிலர் களில் பெரும்பாலானோர் ஸ்டா லின், உதயநிதி ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டும், சிலர் உள்ளூர் அமைச்சர்கள் பெயரைக் கூறியும் பதவியேற்றுக் கொண் டனர். 4 திமுக கவுன்சிலர்கள் பெரியார் பெயரை குறிப்பிட்டனர். சில கவுன்சிலர்கள் அண்ணா, கரு ணாநிதி பெயரை குறிப்பிட்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வெற்றிபெற்ற கவுன்சிலர் வெ.முனியாண்டி பதவியேற்றபோது, பெரியார், அம் பேத்கர் பெயரை குறிப்பிட்டார். பாஜக கவுன்சிலர் பூமா ஜனா முருகன் பதவியேற்று முடித்ததும் மைக்கில் பாரத் மாதா கி ஜே என முழக்கமிட்டுச் சென்றார்.