Published : 02 Mar 2022 07:34 AM
Last Updated : 02 Mar 2022 07:34 AM
புதுச்சேரி ரெயின்போ நகரைச் சேர்ந்தவர் சித்ரா, அவரது தாய் லட்சுமி ஆகியோர் தாங்கள் வளர்க்கும் செல்ல நாயான பப்பிக்கு நேற்று வளைகாப்பு நடத்தினர். அவரது உறவினர்கள், நண்பர்கள் பலரும் இந்நிகழ்வில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இதுபற்றி சித்ரா, அவரது உறவினர் மஞ்சு ஆகியோர் கூறுகையில், "எங்கள் இருவர் வீட்டில்தான் குழந்தையை போல் பப்பிவளர்வாள். ஐந்து ஆண்டுகளாக எங்கள் வீட்டில் செல்லமாக வளர்கிறாள். பப்பிக்காக நாங்கள் ரெயின்போ நகரில் வீடு எடுத்து வந்தோம். வீட்டில் தனிப் படுக்கை, தேவையான சாதனங்கள் வைத்துள்ளோம். எங்கள் வீட்டு குழந்தையாக பாவிப்பதால், பப்பி கருவுற்றதும் வளைகாப்பு நடத்த திட்டமிட்டோம். அதன்படி 11 தட்டு வைத்து, எங்கள் வீட்டுப் பெண்ணை போல்வளைகாப்பு நடத்தியிருக்கிறோம். கருவுற்ற ஒரு பெண்ணுக்கு எந்த உணவு தருவோமா அதேபோல் செய்தோம். பப்பிக்கு அடுத்தவாரம் பிரசவம் நடக்க போகிறது. ஸ்கேன் செய்தபோதுஅவளுக்கு 7 குட்டிகள் பிறக்க உள்ளது தெரிந்தது. 7 குட்டிகள் பிறக்கப்போகிறது என்பதை தெரிந்து கொண்ட பலரும் தங்களுக்கு தர கேட்டார்கள். ஆனால் 7 குட்டிகளையும் நாங்களே வளர்க்க திட்டமிட்டிருக்கிறோம்” என்கிறார் பாசத்துடன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT