மதுரை: டிக்கெட் இன்றி பயணம் - ரூ. 7.79 கோடி அபராதம் வசூல்

மதுரை: டிக்கெட் இன்றி பயணம் - ரூ. 7.79 கோடி அபராதம் வசூல்
Updated on
1 min read

மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் கூறியிருப்பதாவது:

மதுரை கோட்டத்தில் அனைத்து ரயில்களிலும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நடப்பாண்டு பிப்ரவரி 27 வரை நடத்திய திடீர் சோதனைகளில் பயணச் சீட்டு இன்றி பயணம் செய்த 1.37 லட்சம் பயணிகள் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.7.79 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.

இதே காலத்தில் தெற்கு ரயில்வே அளவில் பயணச்சீட்டு இன்றி பயணம் செய்தவர்களிடம் அபராதமாக ரூ.83.99 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த பிப்ரவரி மாதம் மட்டும் பயணச்சீட்டு இன்றி பயணம் செய்த பயணிகளிடம் இருந்து தெற்கு ரயில்வே அளவில் ரூ.9.15 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் ரயிலில் பயணச் சீட்டு, புகைப்பட அடையாள அட்டை ஆகியவற்றுடன் பயணம் செய்வதோடு அனுமதிக்கப்பட்ட அளவில் உடைமைகளை எடுத்துச் செல்ல வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in