Published : 07 Apr 2016 08:11 AM
Last Updated : 07 Apr 2016 08:11 AM

எஸ்எஸ்எல்சி ஆங்கில பாடத்தில் வினாத்தாள் திருத்துவதில் ஆண்டுதோறும் குளறுபடி: மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க கோரிக்கை

தமிழகத்தில் வழக்கமாக எஸ்எஸ்எல்சி ஆங்கிலம் விடைத் தாள் திருத்தும் பணியில், பிற பாடங் களின் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப் படுவதால், மாணவர்களுக்கு மதிப்பெண் இழப்பு ஏற்படுகிறது. நடப்பாண்டு இச்செயலைத் தடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் பிளஸ் 2 மற்றும் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகள் பள்ளிக்கல்வித் துறை மூலம் கணினி தொழில்நுட்பத்தின் உதவி யோடு நடத்தப்படுகின்றன. நடப் பாண்டு பிளஸ் 2 வகுப்பில் மொழிப் பாடங்களின் விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்துவிட்டது. பிற முக்கிய பாடங்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது.

எஸ்எஸ்எல்சி விடைத்தாள்கள் வரும் 15-ம் தேதி முதல் திருத் தப்படுகின்றன. ஆங்கில விடைத் தாள் திருத்தும் பணி மட்டும், ஆங்கில ஆசிரியர்களுக்குப் பதிலாக, பிற பாட ஆசிரியர்களைக் கொண்டு மேற்கொள்ளப்படுகிறது என்ற குற்றச்சாட்டை ஆசிரியர்களே முன்வைக்கின்றனர்.

பள்ளிகளில் ஆங்கிலம் நடத் தாத அல்லது ஆங்கிலப் புலமை இல்லாத ஆசிரியர்களை வலுக் கட்டாயமாக ஆங்கிலம் முதல் மற்றும் 2-ம் தாள் விடைத்தாள்களை திருத்துமாறு பணிக்கின்றனர். குறிப்பாக அறிவியல், கணக்கு மற்றும் சமூக அறிவியல் பாடங் களை போதிக்கும் ஆசிரியர்கள் மிகுதியாக இருக்கும்பட்சத்தில் அவர்களை, ஆங்கில விடைத் தாள்களை திருத்த கட்டாயப் படுத்துகின்றனர்.

இதற்கு மறுக்கும் ஆசிரியர்கள், அவர்கள் பணிபுரியும் பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது பள்ளி தாளாளர் மூலமாக மிரட்டப்படுகின்றனர். அவர்களும் வேறு வழியின்றி, ஆங்கில விடைத்தாள்களை ஈடுபாடின்றி மதிப்பீடு செய்கின்றனர்.

மதிப்பெண் இழப்பு

இவர்களின் கைகளில் கிடைக் கும் ஆங்கில விடைத்தாளுக்கு விடைகள் அடங்கிய `கீ ஆன்ஸர்’ புத்தகத்தில் என்ன உள்ளதோ அந்த வார்த்தையை மாணவர் எழுதியிருந்தால்தான் மதிப்பெண் கிடைக்கும். அதே அர்த்தத்தில் வேறு வார்த்தையை மாணவர் எழுதியிருந்தால், அது புரியாமல் தவறான விடை என கருதி, இந்த ஆசிரியர்கள் மதிப்பெண் வழங்கமாட்டார்கள்.

இதனால், எவ்வளவுதான் ஒரு மாணவர் சிறப்பாக விடை அளித் திருந்தாலும் 10 மதிப்பெண் வினா வுக்கு, அதிகபட்சம் 8 மதிப்பெண் மட்டுமே வழங்கப்படுகிறது. இது மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என சம்பந்தப்பட்ட ஆசிரியர்களே வருத்தம் தெரிவிக்கின்றனர்.

தீர்வு என்ன?

இதுகுறித்து, பட்டதாரி ஆசிரி யர் ஒருவர் கூறும்போது, ‘‘தான் பணிபுரியும் பள்ளியில், ஆங்கிலம் கற்பிப்பதாக தலைமை ஆசிரியர் களின் பரிந்துரை கொண்டுவரும் ஆசிரியர்களை மட்டுமே ஆங்கில விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய அனுமதிக்க வேண்டும். ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களின் எண் ணிக்கை குறைவாக இருப்பின், மற்ற பாடங்களின் மதிப்பீடு தொடங்குவதற்கு 3 அல்லது 4 நாட்களுக்கு முன்ன தாகவே ஆங்கில விடைத்தாள் திருத்தும் பணியை தொடங்க வேண்டும்.

சில அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில், மறு ஆண்டில் பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கு நடப்பு கோடை விடுமுறையிலேயே சிறப்பு வகுப்புகள் தொடங்கிவிடும். இதனால், இப்பள்ளிகள் தங்கள் ஆங்கில ஆசிரியர்களை விடைத்தாள் திருத்தும் பணிக்கு அனுப்பாது. இதுவே விடைத்தாள் திருத்தும் மையத்தில் ஆங்கில ஆசிரியர்களின் பற்றாக்குறைக்கு காரணம். இத்தகைய பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x