கடல்சார் கல்வியில் புதிய முதுகலைப் படிப்புகள்: 4 வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இந்திய கடல்சார் பல்கலை. ஒப்பந்தம்

கடல்சார் கல்வியில் புதிய முதுகலைப் படிப்புகள்: 4 வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இந்திய கடல்சார் பல்கலை. ஒப்பந்தம்
Updated on
1 min read

கடல்சார் கல்வியில் புதிய முது கலைப் படிப்புகளை தொடங்குவது தொடர்பாக 4 வெளிநாட்டு பல் கலைக்கழகங்களுடன் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் புரிந் துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவல கம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் இந்திய கடல் சார் பல்கலைக்கழகம் கடல்சார் கல்வி தொடர்பான படிப்புகளை வழங்குவதுடன் பயிற்சிகளையும் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற் கொண்டு வருகிறது.

இந்தப் பல்கலைக்கழகம் இங்கி லாந்தைச் சேர்ந்த பிளைமவுத் பல்கலைக்கழகம், இன்ஸ்டி டியூட் ஆஃப் சார்ட்டர்டு ஷிப் புரோக்கர்ஸ், ரஷ்யாவைச் சேர்ந்த அட்மிரல் ஜி.ஐ.நேவல்ஸ்கோய் கடல்சார் மாநில பல்கலைக்கழகம், வங்க தேசத்தைச் சேர்ந்த வங்கபந்து ஷேக் முஜிபூர் ரகுமான் கடல்சார் பல்கலைக்கழகம் ஆகிய 4 பல் கலைக்கழகங்களுடன் புரிந் துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் மும்பையில் கடந்த வாரம் நடைபெற்ற கடல்சார் இந்திய மாநாட்டில் மத்திய கப்பல், சாலை போக்குவரத்து, நெடுஞ் சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில் கையெழுத் தானது.

கூட்டுப் பயிற்சி

இந்த ஒப்பந்தத்தின்படி, மேற் கண்ட பல்கலைக்கழகங்களுடன் இணைந்து இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் கடல்சார் கல்வி தொடர்பான கூட்டு முதுகலைப் பட்டப் படிப்புகளை வழங்கும். பல்கலைக்கழகங்களுக்கு இடையே ஆசிரியர்-மாணவர் பரிமாற்றம் நடைபெறும். கூட்டு ஆராய்ச்சி மற்றும் பயிற்சிகள் மேற்கொள்ளப்படும். மேலும், வெளிநாட்டு பல்கலைக்கழகங் களுடன் இணைந்து கருத்தரங்கு கள், பயிற்சிப் பட்டறைகள், மாநாடுகள் நடத்தப்படும்.

பொது நுழைவுத் தேர்வு

அந்தமான் நிக்கோபார் தீவுகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்திய கடல்சார் பல்கலைக்கழகப் படிப்புகளில் சேரும் வண்ணம் அந்த மாணவர்களுக்காக பொது நுழைவுத் தேர்வை நடத்தவும், கடல்சார் பல்கலைக்கழக மாண வர்கள் அந்தமான் அரசுக்குச் சொந்தமான கப்பல்களில் பயிற்சி பெறவும் வகைசெய்யும் ஒப்பந்த மும் கடல்சார் இந்திய மாநாட்டில் கையெழுத்தானது.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in