Published : 17 Apr 2016 10:12 AM
Last Updated : 17 Apr 2016 10:12 AM

2-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கொமதேக கட்சிக்கு தொப்பி சின்னம்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 2-வது வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது. கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் சென்னையில் 30 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஏற்கெனவே 21 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை ஈரோட்டில் வெளியிட்டது. அதைத் தொடர்ந்து 2-ம் கட்டமாக 30 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை கட்சித் தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், சென்னை யில் நேற்று வெளியிட்டார்.

கோவை தெற்கு - கே.வடிவேல் சிங்காநல்லூர் - என்.கார்த்தி, மேட்டுப்பாளையம் - சாந்தி பொன்னு சாமி, பல்லடம் கரைப்புதூர் சி.ராஜேந்திரன், பரமத்திவேலூர் - சி.பூபதி, குமாரபாளையம் - ஆர்.பொன்னுசாமி, குளித்தலை - சங்கமடை எஸ்.அசோக்குமார், மேட்டூர் - ஏ.ராஜா கவுண்டர், சேலம் மேற்கு -ஆவின் ஆர்.வெங்கடாசலம், வீரபாண்டி -கே.பி.காமராஜ், சேலம் வடக்கு - சி.செங்கோட்டுவேல், சேலம் தெற்கு - பி.நல்லதம்பி உட்பட 30 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

பின்னர் நிருபர்களிடம் ஈஸ்வரன் கூறும்போது, ‘‘கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 4 மாதங்களுக்கு முன்பே பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டது. கொங்கு மண்ட லத்தின் நலனுக்காக திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளும் எதுவும் செய்ய வில்லை. அதனால், கொங்கு மண்ட லத்தை தனி மாநிலமாக ஆக்க வேண்டும் எனும் கோரிக்கையை முன்னிறுத்தி இந்த தேர்தலில் கொம தேக பிரச்சாரம் மேற்கொள்ளும்.

72 தொகுதிகளில் போட்டி யிட பொதுக் குழுவில் முடிவெடுத் துள்ளோம். ஆனால், அதைவிட கூடுதல் தொகுதிகளில் போட்டி யிடவும் வாய்ப்பு உள்ளது. பெருவாரி யான தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறுவோம். எங்கள் கட்சிக்கு தொப்பி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x